Home ஆன்மிகம் சடங்குகள், சம்பிரதாயங்கள் கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள்

மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும் பார்க்கலாம். இதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து பலரும் செய்வதை நாம் இன்றும் பார்க்கலாம். ஏன் கோவில் கிணறு, குளத்தில் காசு போடுகிறோம் என பலருக்கும் தெரியாது. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் இங்கு பார்க்கலாம்.

கோவில் குளத்தில் காசு போடுவது

செம்பு உலோகம்

அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. செம்பு உலோகமானது மண், நீர் வண்டல் மற்றும் காற்றில் இயற்கையாக உருவாகிறது. நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில உலோகங்கள் நமது உடலில் கலப்பது அவசியமாகும். அந்த வகையில் செம்பு உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது. செம்பை தண்ணீருக்குள் போட்டு வைப்பதும், தண்ணீர் எடுக்கப் பயன்படுத்வதற்கும் என செம்புப் பாத்திரங்கள் உபயோகிக்கும் பழக்கம் அக்காலங்களில் இருந்தது.

நீர் ஆதாரம்

அக்காலங்களில் நீரானது குழாய்கள் மூலம் விநியோகிக்கும் முறை இல்லை. மக்கள் தங்கள் நீர் தேவைக்கு குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றையே சார்ந்திருந்தனர். குளம், கிணறுகளில் உள்ள தண்ணீருடன் செம்பு கலந்த பின் அந்த நீரை அருந்துவது வலிமையும் குளிர்ச்சியும் தந்து நலம் பயக்கும். குளம் இல்லாத கோயிலை பார்ப்பதே அக்காலத்தில் மிகவும் அரிது. இதனால் செப்புக் காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இக்காலத்தில் குளம் மற்றும் கிணற்று நீரை முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இரும்பு காசு

இப்போதுள்ள கால கட்டத்தில் செப்பு காசு முறையே அடியோடு அழிந்துவிட்டது. ஆனால் நாம் அக்கால முறையான காசு போடுவதையே, இன்றும் ஒரு வழக்கமாக நினைத்து நம்மில் பலர் இரும்பு காசுகளை இன்றும் கோவில் குளம், கிணறுகளில் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் செம்பு காசுகளை கிணறு, குளத்தில் போடுவதே நமக்கு நன்மை அளிக்கும்.

நம்முடைய தமிழரின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. மஞ்சள் தெளிப்பது, பாயில் உறங்குவது என நம் முன்னோர்கள் செய்த அனைத்தும் அறிவியலுடன் கலந்தது. நாம் செய்யும் அனைத்து செயலுக்கு பின்னாலும் அறிவியல் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version