நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால்
‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது. அதன்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,
மீன் கனவில் வந்தால்
1. மீன்கள் கூட்டத்தை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும் என்று அர்த்தம்.
2. மீன் பிடிப்பது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
3. மீன் வலையில் சிக்கி துடிப்பதை போலவோ மீன் இறந்துவிட்டது போலவே கனவு வந்தால் ஏற்கனவே செய்த செயலால் அவமானம் வந்து சேரும் என்று அர்த்தம்.
4. சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்வோம் என்று அர்த்தம்.
ஆமை கனவில் வந்தால்
1. ஆமை கனவில் வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றி அடைவீர்கள் என்று அர்த்தம்.
2. ஆமைகள் கூட்டம் கனவில் வந்தால் மனதில் இருந்த கவலைகள் பறந்து போய் நிம்மதி பிறக்கும் என்று அர்த்தம்.
தவளை கனவில் வந்தால்
1. தவளை கனவில் வந்தால் கவலைகள் மறைந்து மனதில் நிம்மதி பிறக்க போகிறது என்று அர்த்தம்.
2. தவளையை கையால் பிடிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரவிருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவ போகிறது என்று அர்த்தம்.
3. தவளைகள் கூட்டமாக கனவில் வந்தால் மிகவும் நல்லது. செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
4. தவளை கத்துவது போல கனவு வந்தால் அது கெடு பலனை கொடுக்கும்.
5. தேரை கனவில் வந்தால் மிக நெருங்கிய நண்பர்கள் இறப்பார்கள் என்று அர்த்தம்.
6. தேரை மேலே விழுவது போல கனவு கண்டால் மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும் என்று அர்த்தம்.
முதலை கனவில் வந்தால்
1. முதலை உங்கள் காலை கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.
2. முதலை கனவில் வந்தால் உங்களின் அறிவாற்றல் மேன் மேலும் பெருகும் என்று அர்த்தம்.
நண்டு கனவில் வந்தால்
1. நண்டு கனவில் வந்தால் கடன் ஏற்பட்டு துன்பம் உண்டாக போகிறது என்று பொருள்.
2. கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டு வந்தால் கப்பலுக்கு பெரிய ஆபத்து வரபோகிறது என்று அர்த்தம்.
3. நத்தையை கனவில் கண்டால் தொழில் மெதுவாக பாதிக்கபட போகிறது என்று அர்த்தம்.