Home ஆரோக்கியம் உடல்நலம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

நாம் சாப்பிடுவது சத்தான உணவே ஆனாலும் அதை சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடமால் நேரம் தவறி சாப்பிடுதாலும், வெறும் வயிற்றில் சில உணவுகளை நாம் உட்கொள்வதாலும் நம் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

சோடா

சோடா

வெறும் வயிற்றில் சோடாவை குடிப்பது மிகவும் தவறான ஒன்றாகும். சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து  குமட்டல், வயிற்றில் எரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெறும் வயிற்றில் சோடாவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காரணம் தக்காளியில் சுரக்கும் ஆசிட் தான். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். இதனால் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

மாத்திரைகள்

மாத்திரைகளை நாம் எப்போதுமே வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு வயிற்று அமிலத்துடன் கலந்து  உடலில் தேவையில்லாத புண்களை ஏற்படுத்தி விடும்.

 

சிட்ரஸ் பழங்கள்

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ்  பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக பயன்படுகிறது. இவைகளை நாம் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஒருவித வயிற்று எரிச்சல் உருவாகலாம். வெறும் வயிற்றில் ஜீரணிக்க எந்த உணவும் இல்லாத போது இந்த பழங்களை உட்கொள்ளும் போது இவை உணவு குழாயை விரிவு படுத்துகின்றன. இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படுத்துகின்றன.

 

ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்  அதில் உள்ள சேர்மங்கள்  வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால் வயிறு, குடல் ஆகியவை அமிலத்தால் அரிக்கப்பட்டு மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

குளிர்பானங்கள்

கார்பனேற்றப்பட்டு பல நிறங்களில் நிரமூட்டிகளை சேர்த்து பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. அதை காலையில் அருந்தும்போது உடலுக்கு பல்வேறு தீங்குகளை கொடுக்கும். புற்று நோய் வருவதற்கும் இவை காரணியாக இருக்கலாம். இதய நோய் மற்றும் பல விதமான உடல் உபாதைகளும் இவற்றால் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் வெறும் வயிற்றில் இத்தகைய பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகள் என்றால் பலகாரங்கள் , மிக்சர் , நொறுக்கு தீனி, கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் போன்றவகைளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் உடலுக்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காபி, டீ

காபி, டீ இரண்டுமே  மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். இதனால் மலச்சிக்கல் , வாந்தி போன்றவை ஏற்படும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி, டீ  குடிக்கும் பழக்கத்தைக் மேற்க்கொள்ளுங்கள்.

தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து  வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால்  மக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

மேலே குறிப்பிட்டவற்றை சாப்பிடாமல் தவிர்த்து காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் தண்ணீர் அருந்தி விட்டு அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிடுவது சிறந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version