Home ஜோதிடம் கனவு பலன்கள் காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால்

பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போவார்கள். அவற்றில் ஒன்றுதான் காய்கறிகள் பற்றிய கனவு. அப்படி பல்வேறு விதமான காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

 

  1. வெங்காயம் உரிப்பது போல கனவு வந்தால் தொழில் நஷ்டம் அடைய போகிறது என்று பொருள்.
  2. வெங்காயம் சாப்பிடுவது போல கனவு வந்தால் நல்ல விஷயம் ஒன்று நடக்க போகிறது என்று பொருள்.
  3. முள்ளங்கி கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
  4. முட்டைகோஸ் கனவில் வந்தால் உடல் உறுதியடையும் என்று பொருள்.
  5. கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று அர்த்தம்.
  6. கிழங்குகளை கனவில் கண்டால் உடல் உபாதைகள் விலகி உடல் நலம் மேம்படும் என்று பொருள்.
  7. கிழங்குகளை உண்பது போல கனவு வந்தால் இனி நடக்க போவது அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்று அர்த்தம்.
  8. அவரைக்காய் கனவில் வந்தால் மிகவும் நல்ல பலன்கள் நடக்க போவதன் அறிகுறியாகும்.
  9. அவரைக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால் நோய்கள் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
  10. பட்டாணி கனவில் வந்தால் சுபகாரியங்கள் நடக்க போவதன் அறிகுறியாகும்.
  11. ஏலக்காய் கனவில் வந்தால் மற்றவர்கள் உங்களை மதிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.
  12. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால் போதும் போதும் என்னும் அளவுக்கு செல்வம் பெருகும் என்று அர்த்தம்.
  13. பச்சை பூசணிகாய் கனவில் வந்தால் நோய் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  14. திருஷ்டி பூசணிக்காய் கனவில் வந்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது, கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  15. கல்யாண பூசணிக்காய் கனவில் வந்தால் மங்கள காரியங்கள் நடைபெற போகிறது என்று அர்த்தம்.
  16. மஞ்சள் பூசணிகாய் கனவில் வந்தால் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
  17. தர்பூசணி கனவில் வந்தால் தொழிலில் லாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  18. புடலங்காய் கனவில் வந்தால் நோய் ஏற்படபோகிறது என்று அர்த்தம்
  19. கொத்தவரங்காய் கனவில் வந்தால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
  20. கொடிகளில் வளரும் காய் வகைகள் கனவில் வந்தால் குடும்பத்தில் புதிதாக ஒரு வாரிசு உருவாக போகிறது என்று அர்த்தம்.
  21. காய்கறிகள் வெட்டுவது போல போல கனவு வந்தால் உங்களின் பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.
  22. காய்கறிகளைப் மரத்திலோ, செடியிலோ பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
  23. காய்கறி பறிப்பது போல கனவு வந்தால் சண்டை சச்சரவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  24. காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால் நாம் நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
  25. காய்கறிகள் சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்பு ஏற்படும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  26. இஞ்சி கனவில் வந்தால் ஏற்கனவே இருக்கும் நோய்களால் பாதிப்பு ஏற்படலாம் என்று அர்த்தம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version