Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன?

வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரஜ்ஜூவாக, அல்லது ரஜ்ஜூ பொருத்தம் இல்லாத நட்சத்திரமாக கூட அமையும். ரஜ்ஜூ பொருத்தத்தில் கூட மணவாழ்வு குறுகிய காலம் அமைந்தால் கூட வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆனால், வேதை நட்சத்திரங்களை இணைத்தால் அந்த குறுகிய கால மணவாழ்வு கூட துன்பமாக தான் இருக்கும்.

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் அவர்கள் கணவன், மனைவியான பின்பு இருவரும் சண்டை சச்சரவுகளுடன் தான் வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எந்நேரமும் சண்டையும், வம்பும் வழக்கும், வேதனையாகவே இருக்கும். வேதைப்பொருத்தம் சரியாக இருந்தால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும். கணவன், மனைவி இருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதை பொருத்தம் எவ்வாறு பார்ப்பது?

பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதையாக வந்தால் பொருத்தம் இல்லை. மற்றவை பொருத்தமானவை, ஒன்றுக்கொன்று வேதையாக உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் இதோ,

அஸ்வினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகிணி – சுவாதி
திருவாதிரை – திருவோணம்
புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி
உத்திரம் – பூரட்டாதி
அஸ்தம் – சதயம்

மேலே உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுகொன்று பொருந்தாதவை, இந்த நட்சத்திரங்களை இணைக்கக்கூடாது. அதே போல மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திரங்கள் மூன்றும் ஒன்றுக்கொன்று வேதை ஆகும்.

கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க இந்த வேதை பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும். தம்பதிகளின் வாழ்வில் ஏற்பட போகும் துன்பங்களையும், துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழ வைக்கும் சக்தி கொண்டது இந்த வேதைப் பொருத்தமாகும். வேதை என்றால் துன்பநிலை என்றும் அர்த்தம். எனவே, வேதையில் இருக்கும் நட்சத்திரங்களை இணைக்க கூடாது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version