Home ஜோதிடம் யோகங்கள் ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள்

இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஜோதிடரால் கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்னென்ன மாதிரியான யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.

ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையை பொருத்து பலன்கள் மாறுபடும். ஒரு சிலருக்கு அந்த யோகங்கள் பிறந்த உடனேயும், சிலருக்கு மத்திய வயதிலும் அதன் பலன்களை வழங்கும். அதன்படி பல்வேறு யோகங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பல பகுதிகளாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சில யோகங்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.

பந்தன யோகம் :

லக்னாதிபதியும், 6ம் அதிபதியும் ஒன்றாக இணைந்து 1,5,7,9,10 ம் வீடுகளில் சனியோடு இணைந்து இருப்பது பந்தன யோகம் ஆகும்.

பந்தன யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் ஆணைக்கு பணிந்து வாழக்கூடியவர்களாக இருப்பார்கள் அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.

மாதுரு நாச யோகம் :

சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுக்கு மத்தியில் இருந்தாலும், பாவகிரகங்களுடன் கூடி இருந்தாலும் மாதுரு நாச யோகம் உண்டாகிறது.

மாதுரு நாச யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

தாயாருக்கு ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாகும்.

நள யோகம் :

ராகு மற்றும் கேது கிரகங்கள் இல்லாமல் மற்ற ஏழு கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும்.

நள யோகத்தின் பலன்கள் :

இந்த யோகம் கொண்டவர்கள் நிலையாக ஒரே இடத்தில் வாழமாட்டார்.

முசல யோகம் :

ராகு – கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் அமைந்தால் முசல யோகம் உண்டாகும்.

முசல யோகத்தின் பலன்கள் :

இந்த யோகம் கொண்டவர்கள் பல துறைகளில் ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். புகழ் பெறுவார்கள்.

வல்லகி யோகம் :

ராகு – கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம் ஆகும்.

வல்லகி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

சங்கீத துறைகளில் மேன்மை அடைவார்கள். சுக போக வாழ்க்கை வாழக்கூடியவர்கள். நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர்.

ரஜ்ஜு யோகம் :

ராகு – கேது தவிர மற்ற 7 கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே இருப்பது சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும்.

ரஜ்ஜு யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் பேரரசை மிக்கவர்கள். பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள். வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

பாச யோகம் :

ராகு – கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது 5 ராசியில் சஞ்சரித்தால் அது பாச யோகம் ஆகும்.

பாச யோகத்தின் பலன்கள் :

உண்மையை பேசக் கூடியவர்கள். தொழிலில் நேர்மையான எண்ணம் உடையவர்கள். சொத்துக்கள் வாங்குவதில் அதிக விருப்பம் கொண்டவர். நீதி நெறியை மதிபவராகவும், நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார்.

தாமினி யோகம் :

ராகு – கேது தவிர மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் அமைவது தாமினி யோகம் ஆகும்.

தாமினி யோகத்தின் பலன்கள் :

அறிவு ஆற்றல் மிக்கவர். கல்வி ஞானம் உடையவர்கள். நற்பண்புகளை பெற்றவர்களாக இருப்பார்கள். பகைவர்களை தன் வயப்படுத்துபவர். கருணை உள்ளம் கொண்டவர்கள்.

கேதார யோகம் :

ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் இருப்பது கேதார யோகம் ஆகும்.

கேதார யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

விவசாயம், கால்நடைகள் மூலம் லாபம் அடைவார்கள். மனைகள் மூலம் பொருள் ஈட்டுவார்கள். வாகனம், பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார்.

சூல யோகம் :

ராகு – கேது தவிர மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரிப்பது சூல யோகம் ஆகும்.

சூல யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

விபத்துகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். சண்டை சச்சரவுகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர்கள். வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல்படுவார்கள். விபத்து போன்றவற்றால் துன்பப்படுவார்கள்.

யுக யோகம் :

ராகு – கேது தவிர மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 2 ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும்.

யுக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர். நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று சீரழிவார்கள். கயவர் நட்பை கொண்டவர்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்கள்.

சதுரஸ்ர யோகம் :

எல்ல கிரகங்களும் லக்னத்திலும் 4, 7 மற்றும் 10ம் இடங்களிலும் அமைந்து இருப்பது சதுரஸ்ர யோகம் ஆகும்.

சதுரஸ்ர யோகத்தின் பலன்கள் :

இந்த யோகம் கொண்டவர்கள் ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு கொண்டவர்கள் ஆவார்கள். பெரும் புகழுடன் வாழக்கூடியவர். நிர்வாகத்திறமை உடையவர்கள்.

தேனு யோகம் :

ஜாதகத்தில் 2ம் அதிபதி சுப கிரகங்கள் சேர்க்கை அல்லது சுப கிரகங்கள் பார்வை பெற்று பலமோடு இருந்தால் தேனு யோகம் உண்டாகும்.

தேனு யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.

புஷ்கல யோகம் :

லக்னாதிபதி 11ம் இடத்தில் அமர்ந்து சந்திரனுக்கு சுப கிரகங்கள் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது.

புஷ்கல யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.

முக்தி யோகம் :

லக்னத்தில் 12ம் இடத்தில் கேது அமைந்திருந்தால் முக்தி யோகம் உண்டாகிறது.

முக்தி யோகத்தின் உண்டாகும் பலன்கள் :

பிறவா நிலை என்னும் உன்னத நிலையை அடையக்கூடியவர்கள். இறை நம்பிக்கை உடையவர்கள். இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version