துவிதியை திதி
‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி எனவும் அழைப்பார்கள்.
துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
துவிதியை திதியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையுடன் நடக்க கூடியவர்கள். கீர்த்தி உடையவர்கள், பொய் சொல்லாதவர்கள், உண்மையை பேச கூடியவர்கள், பொன், பொருள் சேர்ப்பவர்கள், சொன்ன சொல்லை தவறாதவர்கள், தன் முயற்சிகளால் முன்னேற கூடியவர்கள், பொருள் தேடும் திறமை உடையவர்கள், புதிய பொருட்களை பயன்படுத்தும் விருப்பம் உள்ளவர்கள்.
துவிதியை திதியில் என்னென்ன செய்யலாம்
இது படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு உரிய நாளாகும். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் போன்றவை இந்த திதியில் செய்ய நன்மை உண்டாகும். மேலும் அனைத்து விதமான சுபகாரியங்களையும் இந்நாளில் செய்யலாம்.
மேலும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள், பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். கடவுளுக்கு விரதம் இருக்கலாம். கோவில்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம். துவிதியை திதியில் புல்லால் செய்யக்கூடிய வேலைகள், வாகனங்கள் வாங்கலாம்.
துவிதியை திதியில் என்ன செய்யகூடாது
புதன்கிழமை வரும் துவிதியை திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யப்படும் நல்ல காரியங்கள் முழுமையான பலனை தராது. எனவே புதன்கிழமை துவிதியை நாளில் கூடுமானவரை சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்
துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் மீனம் ஆகும்.
துவிதியை திதிக்கான பரிகாரம்
கடவுளுக்கு சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். தனுசு, மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த திதியில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.
துவிதியை திதியின் தெய்வங்கள்
துவிதியை திதியின் வளர்பிறை தெய்வம் : பிரம்மா
துவிதியை திதியின் தேய்பிறை தெய்வம் : கிருஷ்ணர், மற்றும் வாயு பகவான்.
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.