Home ஆரோக்கியம் உடல்நலம் தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால் நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையில் தினமும் அதை செய்து வந்தோம்.

 

அனால் இன்று கடவுளுக்கு தோப்புகரணம் போடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் செய்ய தவறினாலும் ஆசிரியர்கள் கொடுக்கும் அதிக பட்ச தண்டனை தோப்புகரணம் போட செய்வதாகும். இவ்வாறு செய்வதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்கும்.

தோப்புகரணம் பயன்கள்

தோப்புகரணத்தின் பயன்கள் 

தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

காலை நேரங்களில் தோப்பு கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரிகிறது.

மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.

இந்த எளிமையான உடற்பயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.

தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

தோப்புக் கரணம் போடும் முறை 

முதலில் கால்களுக்கு இடையில் ஒரு சான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு, மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும்.

அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு, பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.

இவ்வாறு ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை போடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் அடைவதை உணரலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version