Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால் என்ன, அதை எவ்வாறு செய்ய வேண்டும், அதன் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

திருமணத்தில் மணமகனாவன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய பின் அக்னி குண்டத்தை சுற்றி ஏழு அடிகள் மணமகளின் கையை பிடித்து நடப்பது நம்முடைய முன்னோர்கள் காலம் தொட்டு இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் ஒரு சாஸ்திர சம்பிரதாயமாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மணமகன், மணமகளிடம் இறைவன் உனக்குத் துணையாக இருப்பான் என்று தன்னுடைய பிரார்த்தனையைச் சொல்கிறான். அந்த ஏழு அடிக்கும் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்,

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

முதல் அடி : பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி : ஆரோக்கியமான நீண்ட வாழ்வு வாழ வேண்டும்.

மூன்றாம் அடி : நல்ல காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி : சுகமும், செல்வமும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி : லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.

ஆறாவது அடி : நாட்டில் நல்ல பருவங்கள் நிரந்தரமாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி : தர்மங்கள் நிலைக்க வேண்டும்

என்று இறைவனிடம் பிரார்த்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சடங்கில் மனிதர்களிடம் இருக்கும் சூட்சமமான மனோவியல் விஷயத்தை சாஸ்திரத்தில் உணர்த்தி உள்ளார்கள் நம்முடைய முன்னோர்கள். 2 நபர்கள் ஒன்றாக 7 அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

உதாரணமாக, நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால், ஏழு அடி நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டி சென்று விடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விடுவோம். முழுமையாக 7 அடிகள் இரண்டு பேரும் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள் நடந்து விடும் என்பது ஒரு சூட்சமமான விஷயம் ஆகும்.

இதனால் தான் இந்த ஏழு அடி பிரார்த்தனை சடங்கு நடத்தபடுகிறது. இதனால் தம்பதிகள் இடையே நல்ல புரிதல் உண்டாகிறது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version