Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்?

திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அட்சதை போடுவது எதற்காக திருமணம் என்பது ஆணும், பெண்ணும் மட்டும் இணையும் விழா அல்ல. மணமகன் மற்றும் மணமகள் என இருவரின் குடும்பங்களும் சேர்ந்து இணைவதுதான் திருமணம். இருவருக்கும் அவர்களது பெற்றோரும், உறவினர்களும் அறிவுரைகளைக் கூறி அரவணைப்பது நல்ல உறவின் தொடக்கமாகும். பெரியவர்கள் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என குறிப்பிட காரணம் தம்பதிகள் இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்பதற்காக.

திருமணத்தில் வெற்றிலை, சந்தனம், மஞ்சள், நெல், உப்பு, மலர் ஆகிய மங்களப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அரிசியும், மஞ்சளும் கலந்தது தான் அட்சதை. இந்த அட்சதையை திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

அட்சதை என்றால் என்ன?

திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்காக பயன்படுத்தும் அட்சதையானது மிகவும் சக்தி நிறைந்தது. உதாரணமாக, அரிசியை சற்றுநேரம் கைகளில் வைத்திருந்தால், அந்த அரிசி உங்கள் உணர்வையும், சக்தியையும் கிரகித்துக் கொள்ளும் தன்மைக் கொண்டது. அதனால்தான் அரிசியை கைகளில் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று பெரியவர்கள் கூறினார்கள்.

அத்தகைய சிறப்புகள் கொண்ட அரிசியுடன் மங்களத்தை அளிக்கக்கூடிய மஞ்சளைச் சேர்த்து மணமக்கள் மீது அட்சதையாகப் போடும்போது, அட்சதைப் போடுபவர்களின் மூலமாக நல்ல உணர்வுகள் மணமக்களை சென்றடைகிறது. இவ்வாறு அட்சதையால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்யப்படும், திருமணம் மற்றும் தொழில்கள், மற்றும் சுபகாரியங்கள் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும்.

திருமண சடங்கில் வெற்றிலை, சந்தனம், மஞ்சள், மலர் ஆகிய மங்களப் பொருட்கள் பயன்படுத்தப்படுபட்டாலும் அரிசியும், மஞ்சளும் கலந்ததுதான் அட்சதை. மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதையானது மணமக்கள் பெரியவர்களின் வாழ்த்தை பெறவும், தீய சக்திகளிடம் இருந்து அவர்களை காத்து வளமான வாழ்க்கை அமைவதற்கு ஆசீர்வதிப்பதாகும்.

அட்சதை என்பது முனை முறியாத அரிசி ஆகும். அதே போல மங்களத்தை குறிப்பது மஞ்சள் ஆகும். அரிசியையும், மஞ்சளையும் இணைத்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவார்கள்.

அட்சதை தூவும்போது தவிர்க்க வேண்டியது

அட்சதையை நின்ற இடத்தில் இருந்து கொண்டே கும்பலோடு, கும்பலாக வீச கூடாது. மங்கள நிகழ்ச்சிகளில் அட்சதை தூவி ஆசி வழங்குவது எதற்காக எனில், மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவை வழங்கும் அரிசி போல், இந்த சமூகத்தில் அனைவருக்கும் உங்களால் நன்மை கிடைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துவதற்காகத் தான் அவ்வாறு செய்யப்படுகிறது.

ஆனால் அதன் அர்த்தம் தெரியாமல் ஏதோ எல்லோருக்கும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று செய்கின்றனர். அதனால், இனி மங்கள நிகழ்ச்சி நடைபெறும் போது அட்சதை தூவுவதன் மூலம் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் கிடைக்கும். வாழ்த்து பெறுபவருக்கும் கிடைக்கும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version