திருமண பொருத்தம் என்றால் என்ன?
ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் வாழ்வின் திருப்பு முனையாக அமைவது திருமண உறவுதான். இன்றைய நவநாகரீக உலகில் அறிவியலும், விஞ்ஞானமும் நன்கு வளர்ந்த இந்த காலக் கட்டத்தில் திருமணங்கள் சரியான முறைப்படி நடக்கிறதா என்றால் அது சந்தேகமே. முறைப்படி என்றால் என்ன? இருமணம் இணையும் திருமண வாழ்வானது “ஆலமரம்” போல தழைத்து ஒங்க நமது முன்னோர்கள் பல வழிகளை கையாண்டனர்.
திருமணம் என்பது மனப்பூர்வமாக ஆணையும், பெண்ணையும் இணைப்பதாகும். அதன் மூலம் ஆண், பெண் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாய் இணைந்து வாழ்ந்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்க நல்ல உறவைப் பேணிக் காத்து தங்களின் வாழ்வை வளமாக்கினர்.
இதற்காக ஆணின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் கணித்து அதற்கு பல பொருத்தங்களை வைத்து மணம் முடித்து வைத்தனர். ஆணின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் பல்வேறு விதங்களில் அலசி ஆராய்ந்து இந்த ஜாதகத்திற்கு சிறப்பான துணை யார் என்பதை பல பொருத்தங்கள் மூலம் நம் முன்னோர்கள் முடிவு செய்து அதை பல்வேறு நூல்களில் எழுதி வைத்தனர்.
திருமண பொருத்தங்கள் எதற்காக பார்க்கப்பட்டன?
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் உள்ளதா, நாக தோஷம் உள்ளதா, வேறு ஏதும் தோஷங்கள் உள்ளதா, சுத்த ஜாதகமா என்று பார்ப்பது வழக்கம். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இது ஒரு மூட நம்பிக்கை என கருதலாம். அறிவியல் மற்றும் விஞ்ஞானப் பூர்வமான விஷயங்கள் பல ஜோதிடத்தில் மறைந்துள்ளன. இதை நமது முன்னோர்கள் விஞ்ஞானப் பூர்வமாக கூறாமல், ஜோதிட சாஸ்திரமாக மட்டும் கூறியதால் தான், நாம் இன்று ஜோதிட சாஸ்திரத்தின் மீது முழு நம்பிக்கை கொள்ள மறுக்கிறோம்.
திருமணப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அவனின் வாழக்கையை ஜாதகம் மூலம் கணிக்க முடியும். எனவே ஒருவரின் வாழ்வில் முக்கியமான தருணமான திருமணத்திற்கு முன்பு ஜாதகம் பார்ப்பது மிக மிக அவசியமான ஒன்று. ஜாதகத்தில் ஜாதகரின் குணநலன், வேலை, வசதி வாய்ப்புகள், ஆயுள், நோய், உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் ஓரளவு கணிக்க இயலும்.
12 வகையான பொருத்தங்கள்
இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம் மற்றும் அவர்களின் ராசியை அடிப்படையாக கொண்டு 12 வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இதை தான் நாம் திருமண பொருத்தம் என்று அழைக்கிறோம். இந்த திருமண பொருத்தத்தை நாம் ராசி பொருத்தம் மற்றும் நட்சத்திர பொருத்தம் என்றும் அழைக்கிறோம். இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இவை மட்டும் இல்லாமல் ஜாதக பொருத்தம் என்றும் ஒரு சில பொருத்தம் உண்டு.
பொருத்தம் பார்க்கும் போது பெண்ணுக்குத்தான் ஜோதிடத்தில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தைக் அடிப்படையாக கொண்டுதான், ஆணின் நட்சத்திரத்தோடு அது பொருந்தி வருகிறதா என்று பார்ப்பார்கள். எல்லா நட்சத்திரங்களும் எல்லோருக்கும் பொருந்தாது. அதற்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கப்படுகின்றது.
12 பொருத்தங்கள் யாவை,
10. வேதைப் பொருத்தம்
11. நாடிப் பொருத்தம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 பொருத்தங்களில் முதல் 10 பொருத்தங்களே முக்கியமானதாக கருதப்படுகிறது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்று கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது பொருந்தியிருப்பது அவசியம்.
இந்த பத்து பொருத்தங்களை மட்டுமே வைத்து ஒரு திருமணத்தை முடிவு செய்யலாமா என்றால், இல்லை என்பது தான் பதில். ஆண், பெண் இருவரின் ஜாதகத்தையும் அலசி, ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள போகும் ஆண், பெண் இருவரின் ஆயுள், குழந்தை பாக்கியம், பெண்ணின் மாங்கல்ய பலம் போன்றவற்றை இருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை வைத்து கணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
ஒரு சிலருக்கு பத்து பொருத்தங்களும் சரியாக பொருந்தி இருக்கும். ஆனால் அவர்களின் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் சரியாக இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு கிரக அமைப்புகள் சரியாக இருக்கும், பொருத்தங்கள் குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு திருமண பேச்சை தொடங்கும் போது ஆண், பெண் இருவருக்கும் வெகு சீக்கிரமே அமைந்து விடும். ஒரு சிலருக்கு அதிக காலம் ஆகும், அல்லது அதிகபடியான ஜாதகங்கள் வந்து பொருந்தாமல் போகும்.
முக்கியமான பொருத்தங்கள்
இந்த 12 பொருத்தங்களில் மற்ற பொருத்தங்கள் பொருந்தலாம், பொருந்தாமலும் போகலாம், ஆனால் முக்கியமான ஐந்து பொருத்தம் இருந்தாலே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவை,
1. தினப்பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. ராசி பொருத்தம்
4. யோனி பொருத்தம்
5. ரஜ்ஜு பொருத்தம்
இந்த ஐந்து பொருத்தம் இருவரின் ஜாதகத்தில் இல்லையென்றால் அந்த ஜாதகம் பொருத்தம் இல்லாத ஜாதகம் எனக் கூறி அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இந்த ஐந்திலும் கட்டாயமாக இரண்டு பொருத்தம் மிக மிக அவசியம் இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தை தவிர்க்கக்கூடாது.
1. யோனி பொருத்தம்
2. ரஜ்ஜு பொருத்தம்
மேற்கண்ட இரண்டு பொருத்தத்தில் ஏதேனும் ஒரு பொருத்தம் பொருந்தி வரவில்லை என்றாலும் திருமணம் செய்யக்கூடாது.
இந்த 12 பொருத்தங்களை பற்றி அடுத்தடுத்த பத்திகளில் விரிவாக காண்போம்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.