பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்?
பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பின்பற்றிய வழிமுறையை நாமும் பின்பற்றி வருகிறோம். ஏன் பந்தக்கால் அல்லது மூகூர்தகால் நாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஈசான்ய மூலை
திருமணத்திற்கு முன்பு வீட்டின் முன்பு முகூர்த்தகால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. இதற்கு மூங்கில் அல்லது சவுக்கு போன்ற கொம்புகளை வாங்கிவந்து அதை சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரித்து வடகிழக்கு மூலையில் நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை ஈசான்ய திசை எனப் போற்றுவர் பெரியோர். ஈசான்ய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும். நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
வரலாற்றில் பந்தக்கால்
முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அந்நாட்டின் அரசனுக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். அதாவது அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இந்தமுறை தொன்று தொட்டு தொடர்ந்து பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடும் முறையாக இன்று நம்மிடையே வளர்ந்து வந்துள்ளது.
நலங்கு
பந்தக்கால் முடிந்து மணமகன் மற்றும் மணமகளுக்கு நலங்கு நிகழ்ச்சி நடைபெறும். திருமணம் முடியும்வரை ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் மணமக்களுக்கு நலங்கு வைக்கப்படும். இது ஒரு சில குடும்ப வழக்கப்படி மாறுபடும். அந்த நாட்களில் அசைவ உணவு தவிர்க்கப்பட வேண்டும்.
துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது
பந்தக்கால் நட்டுபிறகு பந்தல் போடும் வேலையையும் தொடர்ந்து செய்வதில் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் உறவினர்களுடன் விருந்து உண்டு மகிழ்வர். மற்றும் முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணம் முடியும் வரை எவ்விதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுதல் கூடாது.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.