திரயோதசி திதி
திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை சுக்கில பட்ச திரயோதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரயோதசி தினம் கிருஷ்ண பட்ச திரயோதசி என்றும் அழைக்கபடுகிறது.
திரயோதசி திதியின் சிறப்புகள்
தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி திதி ‘தந்தேரஸ்’ என்று அழைக்கபட்டு வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது தன்வந்திரி திரயோதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு செல்வத்தை அள்ளித்தரும் திரயோதசி என்று பெயர். தந்தேரஸ் அன்று செய்யப்படும் தானம் பலமடங்கு பலனளிக்கும். தந்தேரஸ் திருநாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்தால் எமபயம் தீரும் என்பது ஐதீகம். எனவேதான் அந்த விளக்கு ‘எமதீபம்’ என்று அழைக்கப்படுகிறது. யமதீபம் ஏற்றினால் விபத்து, எதிர்பாரா மரணம் ஆகியவை ஏற்படாமலும், மேலும் ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.
திரயோதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
திரயோதசி திதியில் பிறந்தவர்கள் நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள், சிறிது கஞ்சத்தனம் உடையவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல் அதிக பாசம் கொண்டவர்கள், கற்பனை வளம் கொண்டவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றார்போல தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள், தற்பெருமை உடையவர்கள். திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபடலாம்.
திரயோதசி திதியில் என்னென்ன செய்யலாம்
திரயோதசி திதி மன்மதனுக்கு உரிய நாளாகும். இந்நாளில் கடவுள் வழிபாடு செய்வது, நெடும் பயணம் செய்தல், புத்தாடை உடுத்துதல், புதிய நண்பர்களை சேர்த்தல், மற்றவர்கள் மீது அன்பு செலுத்துதல் போன்றவை செய்யலாம். விளையாட்டுகள், மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். திரயோதசி திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷம் ஆகும்.
திரயோதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
திரயோதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள் ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகும்.
திரயோதசி திதிக்கான தெய்வங்கள்
திரயோதசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : சிவன், மற்றும் மன்மதன்
திரயோதசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : பிரம்மா, மற்றும் நந்தி
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.