தசமி திதி
தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும் 10 வது நாள் தசமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் தசமியை சுக்கில பட்ச தசமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் தசமி தினம் கிருஷ்ண பட்ச தசமி என்றும் அழைக்கபடுகிறது.
தசமி திதியின் சிறப்புகள்
சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாள் விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகின்றது. விஜயதசமி என்றால் வெற்றியை தருகின்ற நாள் என்று அர்த்தம். துர்க்கை 9 நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ம் நாளில் அவனை வெற்றிகொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி விழாவாக கொண்டாடபடுகிறது. விஜயதசமி தினத்தன்று தொடங்கும் எந்த காரியமும் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. இதை வடநாட்டில் தசரா விழாவாக கொண்டாடுகிறார்கள்.
தசமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
தசமி திதியில் பிறந்தவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரம் தொடர்பான செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள், மேலும் தான, தர்மங்களில் சிறந்து விளங்குவார்கள். செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள். ஆசாரம் உடையவர்கள், நண்பர்கள் மேல் அதிக பிரியம் கொண்டவர்கள், குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவும் மனபான்மை கொண்டவர்கள். தசமி திதி அன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபட வேண்டும்.
தசமி திதியில் என்னென்ன செய்யலாம்
தசமி திதியானது வீரபத்திரர் மற்றும் தர்மராஜாவிற்க்கு உகந்த நாளாகும். மதவிழாக்கள் நடத்தலாம், ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டால் அது நன்மை தரும். இந்த நாளில் எல்லாவித சுபகாரியங்களும் செய்யலாம். புது தொழில் தொடங்கலாம், திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கலாம், திருமணம் செய்யலாம், புது வீட்டிற்கு குடி போகலாம், அரசு காரியங்களில் ஈடுபடலாம், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கலாம்.
தசமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
தசமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகும்.
தசமி திதிக்கான தெய்வங்கள்
தசமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : வீர பத்திரர்
தசமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் எமன்
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.