சாஸ்திரப்படி எந்தெந்த விரல்களில் மோதிரம் அணியலாம்?
பொதுவாக மோதிரம் அணிந்து கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. இது பழங்காலம் முதலே நடைமுறையில் இருக்கும் வழக்கங்களில் ஒன்றாககம். அதிலும் தங்க மோதிரம் என்பது நம்முடைய நான்காவது விரலில் தான் அணிய வேண்டும் என்று வரையறுத்தார்கள். அதற்கு பெயரே மோதிர விரல் தான்.
மோதிரம் என்பது மோதிர விரலில் அணிவது தான் சிறப்பு. இதன் காரணத்தாலேயே திருமணத்திலும் மோதிரம் அணிவிக்கும் வழக்கம் உள்ளது. நாம் அணியும் மோதிரம் தங்கம் மற்றும் வெள்ளியில் இருப்பதை விட செம்பினால் செய்த மோதிரத்தை அணிவது மிகவும் சிறப்பாகும். செம்பினால் செய்த மோதிரத்தை அணிவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்திலும் இடது கை மோதிர விரலில் தான் மோதிரம் அணியும் வழக்கம் உள்ளது. இடது கை மோதிர விரல் என்பது இதயத்துடன் தொடர்புடையது. அதனால் தான் காதல், அன்பின் வெளிப்பாடாக இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கும் பழக்கம் உள்ளது. நம்முடைய வலது கை உடலின் செயல்பாடுகளுடனும், இடது கை மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டது.
எந்த விரலில் மோதிரம் அணிந்தால் என்ன பலன்
கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றலும், ஆரோக்கியமும் மேம்படும்.
ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் ஒருவரின் ஆளுமை திறன் அதிகரிக்கும். சிறந்த வாழ்க்கையை தேடுபவர்கள் இந்த விரலில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
நடுவிரலில் மோதிரம் அணிவதால் வசீகரம் அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.
மோதிர விரலில் மோதிரம் அணிவதால் வாழ்க்கை செல்வ செழிப்பாக அமையும். மோதிர விரலில் அணியும் மோதிரம் தங்கமாக இருக்க வேண்டும்.
சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அது கஷ்டத்தை தரும். ஆரோக்கியத்தை பாதிக்கும்.