ராசி பொருத்தம் என்றால் என்ன?
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படுகிறது. இது சந்திர லக்னம் என்று அழைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் உடல் ஆரோக்கியம், மக்கள்பேறு, நீண்ட ஆயுள் போன்றவற்றை பெற ராசிப் பொருத்தம் முக்கியம். பெண்ணின் ராசியில் இருந்து எண்ணும்போது ஆணின் ராசியானது 6க்கு மேல் இருக்க வேண்டும். அவ்வாறு 6க்கு மேல் இருந்தால் ராசி பொருத்தம் உள்ளது எனலாம். மேலும் ஒரே ராசியாக இருந்தாலும் ராசி பொருத்தம் உண்டு.
ராசி பொருத்தம் பார்ப்பது எப்படி?
ஆணின் ராசிக்கு பெண்ணின் ராசி ஏழவதாகவோ அல்லது பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசி ஏழவதாகவோ ராசியாக இருந்தால் சம சப்தம ராசிப் பொருத்தம் உண்டு. இதிலும் சில விதி விலக்கு உண்டு. சம சப்தம் ராசிகளில் கடகம், மகரம், சிம்மம், கும்பம் போன்ற ராசிகள் சம சப்தமமாக இருந்தால் ராசிப் பொருத்தம் இல்லை எனலாம்.
பெண் ராசிக்கு பொருத்தமான ஆண் ராசிகள்
மேஷம் – மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
ரிஷபம் – ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம், மேஷம்
மிதுனம் – மிதுனம், தனுசு, கும்பம், மீனம், மேஷம், ரிஷபம்
கடகம் – கடகம், மகரம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம்
சிம்மம் – சிம்மம், கும்பம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
கன்னி – மீனம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்
துலாம் – துலாம், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி
விருச்சிகம் – விருச்சிகம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்
தனுசு – தனுசு, மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
மகரம் – மகரம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு
கும்பம் – கும்பம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்
மீனம் – மீனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
ராசி இருக்கும் இடத்தின் பலன்கள்
பெண் ராசியில் இருந்து ஆண் ராசியானது 2, 3, 4, 6, 12 ஆக வரக்கூடாது.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 2வது ராசியாக வந்தால் பிரச்சனைகள் ஏற்படும்.
பெண் ராசிக்கு ஆணின் ராசியானது 3வது ராசியாக வந்தால் துக்கம் ஏற்படலாம்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 4வது ராசியாக வந்தால் ஏழ்மை உண்டாகும்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 5வது ராசியாக வந்தால் வைதவ்யம்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 7வது ராசியாக வந்தால் உத்தமம், மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 9வது ராசியாக வந்தால் சௌமாங்கல்யம் உண்டாகும்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 10வது ராசியாக வந்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 11வது ராசியாக வந்தால் சுகம் உண்டாகும்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 12வது ராசியாக வந்தால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசியானது 6, 7, 8 ராசியாக வந்தால் அதில் ஒரு சில விதி விலக்கு உண்டு. மேஷத்துடன் 6 வது ராசியான கன்னியை சேர்க்கலாம். தனுசு ராசியில் இருந்து 6 வது ராசியான ரிஷபத்தை இணைக்கலாம். துலாம் ராசியில் இருந்து 6 வது ராசியான மீன ராசியை இணைக்கலாம். கும்பத்துடன் கடகத்தையும், சிம்மத்துடன் மகரத்தையும் சேர்க்கலாம். அதேபோல மிதுனத்துடன் விருச்சிகத்தை சேர்க்கலாம். இந்த சேர்க்கை சுப சஷ்டாஷ்டகம் எனப்படும்.
ஆண், பெண் இருவரும் ஒரே ராசியாக இருக்கலாம். இருவரின் ராசிகளும் ஒன்றுக்கொன்று 7-ம் இராசியாக இருக்கலாம். ஆனால் இருவரின் ராசிகளும், கடக மகரமாகவோ, அல்லது சிம்ம கும்பமாகவோ இருக்கக் கூடாது. பெண் மேஷ அல்லது கடக ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும். 9, 10, 11 மற்றும் 12ம் ராசிகளில் ஆண் ராசி அமைவது சிறப்பு. மேஷம் கன்னி, தனுசு ரிஷபம், துலாம் மீனம், கும்பம் கடகம், மிதுனம் விருச்சிகம் சஷ்டாஷ்க தோஷம் இல்லை.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.