புரட்டாசி சனிக்கிழமை விரதம்
தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் கோவிந்தா என்னும் திருநாமமே. நாளை 17.09.2021 அன்று புரட்டாசி மாதம் ஆரம்பம் ஆகிறது.
புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பனாதகும்.
புரட்டாசி மாத வழிபாட்டு முறைகள்
- புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை படைத்து வழிபட வேண்டும்.
- அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.
- பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்கரிக்கவும்.
- உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்ரகமாகவோ இருந்தால் அதனை எடுத்து நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்காரம் செய்யவும்.
- பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஏற்றவும்.
- பின்பு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக செய்தவற்றை படைக்கவும்.
- படையலில் முக்கியமாக இடம்பெற வேண்டியது மாவிளக்கு, துளசி தீர்த்தம்..
- பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
- துளசி தீர்த்தம் வைக்க வேண்டும்.
- மாவிளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
- பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயாசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்க வேண்டும்.
- வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
- பின் கற்பூர தீபாராதனை மற்றும் சாம்ப்ராணி காட்டி பெருமாளை வழிபட வேண்டும்.
- முதலில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- பின் படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
- இவ்வாறு வழிபடுவாதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைத்து திருமாலின் பார்வை நம் மீது படும். வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்க்கை அமையப் பெரும்.