கம்பு அல்வா
கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளுக்கு கம்பை இது போன்று அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
- கம்பு – 1 கப்
- நெய் – தேவையான அளவு
- நாட்டுச் சர்க்கரை – 1 கப்
- உப்பு – சிறிதளவு
- முந்திரி, திராட்சை – சிறிதளவு
- ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை
- முதலில் ஒரு கப் கம்பு தானியத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்த காம்பினை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஊற வைத்த காம்பினை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
- அரைத்த விழுதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள கம்பு பாலை சேர்த்துக் கொள்ளவும்.
- இந்த பாலை முதலில் ஒரு அகலமான கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மிதமான தீயில் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
- நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.
- கெட்டியான பதத்திற்கு வந்ததும் 1 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். உப்பு சேர்ப்பதால் இனிப்பு சுவை சற்று கூடுதலாக தெரியும்.
- வாசனைக்காக சிறதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- ஏலக்காய் சேர்த்ததும் தேவையான அளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறி விடவும்.
- இறுதியாக சிறிதளவு முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சத்தான கம்பு அல்வா ரெடி.