இறால் வடை
தேவையான பொருட்கள்
- இறால் – 100 கிராம்
- கடலைபருப்பு – 250 கிராம்
- வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
- பச்சை மிளகாய் – 5 ( பொடியாக நறுக்கியது )
- பூண்டு – 6 பல்
- இஞ்சி – 1 துண்டு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- சோம்பு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இறாலில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- கடலை பருப்பை நன்கு கழுவி ½ மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வேக வைத்த இறாலை மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீர் வடித்து மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
- அரைத்த கடலைபருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.
- பின் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின் அரைத்து வைத்துள்ள இறாலை சேர்த்துக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் சிவந்த பின் எடுத்து பரிமாறினால் சுவையான இறால் வடை ரெடி.