பெண்கள் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
பெரும்பாலான பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்காத காரணத்தினால் பாதிக்கபடுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டினால் இளம் வயதிலேயே நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.
பெண்கள் உண்ணும் உணவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். எனவே பெண்கள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த கீழ்க்கண்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்
பெண்களின் ஆரோக்கியத்தில் தக்காளி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய், எண்ட்டோமெட்ரியல் புற்றுநோய், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கிறது.
வால்நட்ஸில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே 8 வாரங்களுக்கு இரண்டு அவுன்ஸ் வால் நட்ஸை சாப்பிட்டு வருவது இதயத்திற்கு நல்லது. இது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மார்பக புற்று நோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
தினசரி ஒரு வாழைப்பழம் உணவு சாப்பிடுவதற்கு முன் எடுத்துக் கொள்வது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கீரை
பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பெண்கள் தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் பால் எடுத்துக் கொள்வது நல்லது. பால் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் விட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
சிவப்பு மிளகாயில் விட்டமின் சி அதிகளவு காணப்படுகிறது. இது சருமத்திற்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சிவப்பு மிளகாய் சாப்பிடுவது சருமத்தில் சுருக்கம் மற்றும் சரும வறட்சியை குறைக்க உதவும். சிவப்பு மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்வதால் சளி, காய்ச்சல் போன்ற அழற்சி தொல்லைகள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.
ஓட்ஸில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் விட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பீட்டலைன் நிறமிகள் கொண்ட பீட்ரூட் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வேதியியல் தடுப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது செரோடோனின் அளவை உயர்த்துகிறது. இது உங்க மனநிலையை அதிகரிக்க உதவுகிறது.
லவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோய் போன்றவற்றை தடுக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. மேலும் பெண்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பெண்கள் சாப்பிட மற்றொரு ஆரோக்கியமான உணவு என்றால் அது பயிறு வகைகள் தான். வாரத்திற்கு ஒரு முறை என பயறு உட்கொள்வது சர்க்கரை அளவை சமப்படுத்தவும், எடை பராமரிப்பிற்கு உதவவும். புற்றுநோய் செல்கள் உற்பத்தியை தடுக்கும்.
பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய பூசணிக்காய் பெரிதும் பயன்படுகிறது. பூசணிக்காயில் உள்ள விட்டமின் ஏ பார்வையை மேம்படுத்தவும், வயது தொடர்பான பார்வைக் கோளாறுகளை குறைக்கவும் உதவுகிறது. எனவே பெண்கள் பூசணிக்காய் அன்றாட உணவில் சேர்த்து வருவது நல்லது.
சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. இது ஒரு நபர் இதய நோயால் குறைக்கும் வாய்ப்பை கிட்டத்தட்ட 33 %வரை குறைக்கிறது. பெண்களுக்கு கீல்வாதம் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
இது தவிர முட்டை, சாதாரண யோகார்ட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஆளி விதைகள், ஆலிவ் ஆயில், பூண்டு, அஸ்பாரகஸ், டார்க் சாக்லேட், காபி,ப்ளூ, பெர்ரி போன்ற உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.