பஞ்சமி திதி
பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கபடுகிறது. பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும்.
பஞ்சமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் வேத ஆராய்ச்சி உடையவர்கள், எதிர் பாலினத்தின் மேல் அதிக பிரியமுள்ளவர்கள், சிறிது கஞ்சத்தனம் உடையவர்கள். கலைகளின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படகூடியவர்கள், கற்பனை வளம் அதிகம் உடையவர்கள், இரக்கம் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பார்கள், வீடு, மனை யோகம் கொண்டவர்கள்.
பஞ்சமி திதியில் என்னென்ன செய்யலாம்
இது நாகதேவரின் நாளாகும். இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும்.
பஞ்சமி திதி வழிபாடு
பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டு வரலாம். பஞ்சமி திதியன்று பஞ்சமி தீப வழிபாடு செய்யலாம். பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். பஞ்சமி திதி வரும் தினத்தன்று குத்துவிளக்கில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும். நம்முடைய வேண்டுல்தல்களை மனதில் நினைத்து “ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு மற்றும் பழம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இதை செய்து வருவதன் மூலம் ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லை, வறுமை போன்றவை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என எந்த பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபடலாம்.
பஞ்சமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
பஞ்சமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.
பஞ்சமி திதிக்கான தெய்வங்கள்
பஞ்சமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : திரிபுரசுந்தரி, மற்றும் நாகர்.
பஞ்சமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : இந்திரன், மற்றும் நாக தேவதைகள்.
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.