நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும்
நாளை வியாழக்கிழமை 11.06.2021 அன்று நவராத்திரி விழா ஆரம்பம் ஆகிறது. நாளை முதல் நவராத்திரி கொலு வைத்து அம்பிகையை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நவராத்திரியின் முதல் நாளான நாளை பிரதீபாத திதியில், நவதுர்கையில் முதல் அம்சமான சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள் முடிவில் அக்டோபர் 14, 15ம் தேதி முறையே ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட்டு நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும்.
நவராத்திரி விரதம் என்பது சக்தியை போற்றக்கூடிய விரதமாகும். இந்தியா முழுவதும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படக்கூடிய தீபாவளி, பொங்கல், போன்ற பெரிய பண்டிகைகளில் நவராத்திரியும் மிக முக்கியமான பண்டிகையாகும்.
நவராத்திரி விரதம் கடைபிடிக்கக் கூடிய 9 நாட்களும் வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். வடமாநிலங்களில் நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம்.
நவராத்திரி கொலு வைப்பது என்பது பல படிகளில் பலவிதமன புராண கதைகளை கூறும் பொம்மைகளை அலங்கரித்து வைப்பதேயாகும். நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. கொலுவில் வைத்திருக்கும் பொம்மைகள் அவரவர் வசதியை பொருத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வைக்கலாம். அனால் அவை ஒற்றைப்படை எண்ணில்தான் இருக்க வேண்டும்.
மனிதன் எப்படி படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள்
நவராத்திரி விரதம்
கொலு வைக்கும் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான நெய்வேத்தியங்களை அம்மனுக்கு படைக்க வேண்டும்.
இந்த சிறப்பு வாய்ந்த நவராத்திரி நன்னாளில் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை பராசக்தியாக பாவித்து அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ,அம்பிகைக்கு படைத்த நெய்வேத்திய பிரசாதம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் பராசக்த்தியின் அருள் முழுமையாக கிடைக்கபெறும். மாங்கல்ய பலம் கூடும், தீர்க்க சுமங்கலியாக இருக்க அம்பிகையின் அருள் கிடைக்கும்.
திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.