Home ஜோதிடம் திதி பலன்கள் நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி

நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் நவமி தினம் கிருஷ்ண பட்ச நவமி என்றும் அழைக்கபடுகிறது.

நவமி திதியின் சிறப்புகள்

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தாலும் அதில் ராம அவதாரம் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அத்தகைய இராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ‘இராம நவமி’ என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நவமி திதி

 

நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

நவமி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தி உடையவர்கள். இவர்களுக்கு மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசம் இருக்காது. எதிர் பாலினத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். புகழ் பெறுவதில் ஆர்வம் இருக்கும். எதிர்ப்பை கண்டு அஞ்சதவர்களாக இருப்பார்கள், கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள், விருப்பம் போல வாழக்கூடியவர்கள்.

நவமி திதியில் என்னென்ன செய்யலாம்

நவமி திதியின் தெய்வம் அம்பிகையாகும். இந்நாளில் எதிரிகளை வெல்லுதல், தெய்வங்களுக்கு பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவை செய்யலாம். புதிய வேலைகளுக்கு செல்லலாம், நல்ல காரியங்கள் செய்யலாம், நகைகள், ஆடைகள் வாங்கலாம், தர்ம காரியங்கள் செய்யலாம், ஆயுதங்கள் செய்தல் மற்றும் உபயோகித்தல், செங்கல் சூளைக்கு நெருப்பு இடுதல் போன்றவை செய்யலாம்.

நவமி திதியில் என்ன செய்யக்கூடாது

நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் எழும். எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நவமி திதிக்கான பரிகாரங்கள்

நவமி திதி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வேளையில் ஈடுபட்டால் அனைத்து காரியங்களும் சுமுகமாக நடைபெறும். ராமநவமி விரதம் இருந்து ராமனை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் ஆசி கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

நவமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

நவமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகும்.

நவமி திதிக்கான தெய்வங்கள்

நவமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் சரஸ்வதி

நவமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : துர்க்கை, மற்றும் சரஸ்வதி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version