லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா?
பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம் அழகாக இருக்கும்.
லிப்ஸ்டிக் போடாமல் வெளியில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. லிப்ஸ்டிக் போட்டால் தான் அழகாக இருக்கிறோம் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். சாதாரணமாக வெளியில் சென்றால் கூட லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டுதான் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
லிப்ஸ்டிக் போட்டால் உதடுகள் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் பின்னல் இருக்கும் ஆபத்தை பலரும் உணர்வதே இல்லை. உதட்டை அழகாக காட்டும் லிப்ஸ்டிக்கில் பல்வேறு கெமிக்கல்கள், நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. கெமிக்கல் நிறைந்த லிப்ஸ்டிக்கை நாம் பயன்படுத்துவதால் நாளடைவில் உதடுகளில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஆபத்தை கொடுக்கும் செயற்கையான லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி நமது உதட்டை சிவப்பாக மாற்றுவதை விட இயற்கை முறையில் நம் உதடுகளை அழகாகவும், சிவப்பாகவும் , பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதே சிறந்தது.
இயற்கை முறையில் உதட்டை சிவப்பாக மாற்ற சில டிப்ஸ்
ரோஜா மற்றும் பால்
பாலில் சில ரோஜா இதழ்களை எடுத்து இரவில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை ரோஜா இதழ்களை எடுத்து கொஞ்சம் பால் ஊற்றி மைய பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை உதட்டில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிவிடுங்கள். இதை தினமும் செய்து வர உதட்டின் நிறம் இயற்கையாகவே சிவப்பாக மாறும்.
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறை தேனில் நன்கு கலந்து அதை உதட்டில் தினமும் தடவி வர உதடு சிவப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்.
தேன் மற்றும் சர்க்கரை
தேனில் சர்க்கரை கலந்து உதட்டில் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் உதட்டில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உதட்டிற்கு எண்ணெய் பதமும் கிடைக்கும். இதனால் உதட்டின் கருமை நிறம் மாறி மென்மையாகவும் சிவப்பாகவும் இருக்கும்.
மஞ்சள் மற்றும் பால்
மஞ்சளுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை உதட்டில் அப்ளை செய்து காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்து அதுவாகவே உதிர்த்து விழும்போது கழுவிவிடுங்கள். இரவு தூங்கும் போது செய்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
- பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து, தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சி யளிக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை சம அளவு கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன் உதடுகளில் தடவ வேண்டும். இது உதடுகளை சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.
கேரட் அல்லது பீட்ரூட் சாறை எடுத்து உதட்டின் மீது தடவி வருவதன் மூலம் உதட்டின் நிறம் அதிகரிக்கும்.
கேரட் பீட்ரூட் துண்டை மசித்து அந்த விழுதை உதட்டின் மீது தடவி விடலாம். செயற்கையாக இல்லாமல் இயற்கையாக உதட்டுக்கு நிறம் அளிக்க கூடியவை இவை. இது உதட்டுக்கு இயற்கையான சிவப்பு நிறத்தை அளிக்கும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அந்த பொடியுடன் சிறிது பால் சேர்த்து உதட்டின் மீது தடவி வர உதடு பளிச்சென்றும் மென்மையாகவும் இருக்கும். உதட்டின் நிறமும் மேம்படும்.
தேங்காய் எண்ணெய், எலுமிச்சை பழ சாறு, தேன் இந்த மூன்று பொருட்களையும் கலந்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடு ஒரே நாளில் நல்ல மாற்றத்தை பெறும்.