Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன?

நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழலாம். இந்த பொருத்தம் மணமக்களுக்கு அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி. இந்த நாடி பொருத்தம் மூலம் ஆண், பெண் இருவரின் ரத்த ஒற்றுமை எவ்வாறு உள்ளது என நட்சத்திரங்களை வைத்து கணக்கிடப்படுகிறது.

தற்போது பொருத்தம் பார்க்கும் போது பார்க்கப்படும் முக்கிய பொருத்தமாக நாடி பொருத்தம் உள்ளது. ஆண், மற்றும் பெண் இருவருக்குள்ளும் உள்ள ரத்த ஒற்றுமையை நாடி பொருத்தம் மூலம் அறியலாம். மருத்துவ வசதி பெரியளவில் இல்லாத அந்த காலங்களில் மனிதர்களின் நாடியை வைத்தே அவர் எந்த வகையான உடம்பை கொண்டவர் என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உடலை நோய் நொடியில் இருந்து தங்களை பாதுகாத்து வந்தனர்.

நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் எவ்வாறு பார்ப்பது?

நட்சத்திரங்களை வைத்து ஒருவர் எந்தவிதமான் நாடி கொண்டவர் என்பதை அறியலாம். அதனால் ஆண், பெண் நட்சத்திரங்களை நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நாடியாக இருந்தால் பொருத்தம் கிடையாது. ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு நாடியாக இருந்தால் இந்த பொருத்தம் உண்டு.

பொதுவாக நாடி மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சூடு உடம்பிற்கு சூடு உடம்பு கொண்ட நட்சத்திரத்தை இணைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படலாம்.

நாடி பொருத்தத்தின் வகைகள்

பார்சுவ எனப்படும் வாத நாடி:

காற்று மற்றும் நிலம் தொடர்பு கொண்ட நாடி இது. அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகியவை வாத நாடி உள்ள நட்சத்திரங்களாகும்.

மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி:

நெருப்புத் தன்மை அதாவது உடல் சூடு தொடர்பு கொண்ட நாடி. பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகியவை பித்த நாடி உள்ள நட்சத்திரங்களாகும்.

சமான நாடி அதாவது சிலேத்தும(நீர்ம) நாடி:

நீர் தொடர்பு கொண்ட நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகியவை சிலோத்தும நாடி நட்சத்திரங்களாகும்.

கணவன், மற்றும் மனைவி இடையே குடும்ப வாழ்க்கை காரணமாக உடலில் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த நாடி பொருத்தம் அவசியம் தேவை. உடம்பில் உள்ள சத்துக்கள், ரத்தம், சூடு, குளிர்ச்சி, போன்ற விஷயங்களை கொண்ட பொருத்தம் என்பதால் இது அவசியம் பார்க்க வேண்டும். இந்த நாடி பொருத்தம் நமது முன்னோர்கள் திருமண பொருத்தம் பார்க்கும் பார்த்த மிக முக்கிய பொருத்தமாகும். இது முதல் 10 பொருத்ததில் வராமல் இருந்தாலும் இதை பார்க்க வேண்டியது அவசியம்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version