மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி நிறைந்தவர்கள். எல்லோராலும் விரும்பப்படும் மனிதர்களாக இருக்க விரும்புவார்கள். முன்கோபமும், பிடிவாத குணமும் இவர்களிடம் அதிகம் இருக்கும். தாய் மேல் அதிக பாசம் கொண்டவர்கள்.
பேச்சிலும், நடத்தையிலும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக இருக்கக் கூடியவர்கள். எதையும் வேக வேகமாக செய்ய விரும்புவார்கள். ஆனால் இவர்களுக்கு விவேகம் குறைவாக இருக்கும். இவர்கள் நல்ல கூரிய புத்தியுடையவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் இருக்கும். உணர்சிகளை கட்டுபடுத்த கூடியவர்கள். இவர்கள் மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய பெரிய இடத்தில் இருப்பார்கள். நிர்வாக பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்களில் பெரும்பாலனோர் சற்று குண்டான உடல்வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுயகௌரவத்துடன் இருப்பதை விரும்புவார்கள். சுயகௌரவத்தை எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் சிந்தித்து கொண்டே இருப்பார்கள். பேச்சில் அதிகாரம் நிறைந்திருக்கும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் சகல வசதி வாய்புகளுடன் வாழ்வார்கள்.
இவர்கள் சுரங்கம், ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு துறை போன்றவற்றுடன் தொடர்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். தேவை இல்லாத காரியங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனையில் சிக்கி கொள்வார்கள். இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாழ்க்கை துணை அமையுமா என்பது சந்தேகமே. இவர்கள் பிறரை நம்பி ஏமாறுவார்கள். சிரித்த முகமும், சற்று குள்ள தோற்றமும் உள்ளவர்களாக இருப்பார்கள்.
புதிய விஷயங்களை கற்று கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். தன்னை அழகுடன் காட்டி கொள்வதில் மிகுந்த விருப்பமுடையவராக இருப்பர்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரியென வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் இவர்களுக்கு இருக்கும். இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் தைரியம் மிகுந்தவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை தெற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வருவார். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம், குழந்தை பாக்கியம், நல்ல வேலைவாய்ப்பு அமையும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை பொருளாதாரத்தை குடும்ப முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார். மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணத் தடை நீங்க மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்