திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?
திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே இணைந்திருக்கும். இந்த திருமண பந்தத்தில் ஒன்றாக இணையும் மணமக்களின் திருமண விழாவுக்கு வருகை தந்து அசீர்வதிக்குமாறு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சுற்றத்தாருக்கும் வேண்டுகோள் விடுக்கும் ஒரு அழைப்பு மடல் தான் திருமண அழைப்பிதழ் ஆகும்.
சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கடைபிடிக்கக் வேண்டிய ஒரு திருமண சடங்காக திருமண அழைப்பிதழ் மற்றவர்களுக்கு வழங்குவது தொன்று தொட்டு நமது நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும், தங்களுடைய வசதி, வாய்ப்புக்கு ஏற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து அச்சடித்து எல்லோருக்கும் வழங்குவார்கள்.
அவ்வாறு திருமண அழைப்பிதழை அச்சடித்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் நமது சுற்றத்தில் உள்ளோருக்கும் வழங்கும்போது திருமண அழைப்பிதழ் மட்டும் இல்லாமல் அதனுடன் வெற்றிலை,பூ, பாக்கு, பழம், மற்றும் குங்குமம் ஆகியவற்றையும் வழங்கும் பழக்கம் இருக்கிறது. மேலும் சிலர் திருமண அழைப்பிதழுடன் நாணயம், புது துணிகள் போன்றவற்றை இணைத்து வழங்கும் பழக்கம் உள்ளது.
அவ்வாறு திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது திருமண அழைப்பிதழ்களை வெறும் கையால் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்து கொடுப்பார்கள். இவ்வாறு தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பதற்கான காரணம் என்னவென பின்வருமாறு பார்ப்போம்.
உதாரணத்திற்கு, ஒரு சிலர் திருமண அழைப்பிதழ் மட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு பொருளை கடனாக கொடுத்தால் கூட தட்டில் வைத்து தான் கொடுப்பார்கள். அதேபோல் ஒருவர் மற்றொவருக்கு அரிசி, நெல் முதலியவற்றை கொடுக்கும்போது முறத்தில் வைத்து கொடுப்பார்கள். இவ்வாறு கொடுப்பவரும், வாங்குபவரும் பொருளாதார நிலையில் உயர்திருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் வேற்றுமை எங்கள் மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே அவ்வாறு தட்டில் வைத்துக் கொடுத்தனர்.
மேலும் ஒரு பொருளைக் வெறும் கையால் கொடுத்தால், கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவரின் கை கீழேயும் இருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருவரின் மனதிலும் தோன்றக்கூடாது என்பதற்காக தான் எந்த பொருளை கொடுத்தாலும், நம் முன்னோர்கள் தட்டில் வைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாகவே திருமண அழைப்பிதழை கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுக்கின்றனர். மேலும், திருமண அழைப்பிதழ் தாம்பூல தட்டில் வைத்துக் கொடுக்கும் போது, அதனுடன் வெற்றிலை, பூ, பாக்கு, பழம், குங்குமம் போன்ற மங்கள பொருட்ளை வைத்து கொடுக்கின்றனர்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.