மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்
சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அவர்கள் தந்தையை போன்றே இருப்பார்கள். தந்தை செய்து வரும் தொழிலையே செய்வார்கள்.
மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருடைய தலையீடும் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். இவர்களிடம் முன்கோபமும், பிடிவாத குணமும் இருக்கும். இவர்கள் ஒரு ஆடம்பர பிரியர்கள். ஆடம்பரமாக வாழ்வதற்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை எண்ணி ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஒரே இடத்தில் தங்கியிருக்க இவர்களால் முடியாது. கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்கள் இவர்கள்.
யாராவது தவறு செய்தால் அதை பயமில்லாமல் துணிச்சலுடன் சுட்டி காட்டும் குணம் கொண்டவர்கள் இவர்கள். மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள்.
இவர்கள் நீதி, நேர்மை, நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். நல்லவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கும் இவர்கள் தீயவர்களுடன் நட்புறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். எதையும் கூர்ந்து கவனிப்பதில் வல்லவர்கள். எல்லாருக்கும் அவர்களால் முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் தனித்தன்மை நிறைந்திருக்கும். ஆகையால் ஒரு தொழிலை இவர்களிடம் நம்பி ஒப்படைத்தால் தொழில் விருத்தியாகும். இவர்கள் இளம் வயதிலேயே உலக அனுபவங்களைப் பெற்று இருப்பார்கள். நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றிருப்பார்கள். ஆகையால் இவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக வர வாய்ப்புகள் அதிகம். இவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை எப்பாடு பட்டாவது முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் இவர்களுடைய வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிட்டால், அந்த பிரச்சனைகளை கண்டு துவண்டு விடுவார்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில் வல்லவர்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் தேவையில்லாத ஆடம்பர செலவுகள் செய்துவிட்டு, வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகவும் சிரமப்படுவார்கள்.
இவர்கள் ஒரு காரியத்தை ஆரம்பித்தால் அதை முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.