Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர பொருத்தம் இருந்தால்தான் அவர்களின் வம்சம் தழைக்கும். இந்த பொருத்தம் குழந்தை பாக்கியத்தையும், செல்வத்தையும் அளிக்கிறது. மகேந்திர பொருத்தம் இல்லாவிட்டால் நாடி பொருத்தம் பார்க்கப்படும் அல்லது மர பொருத்தம் பார்க்கப்படும்.

மகேந்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?

குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? என்பதை இந்த மகேந்திர பொருத்தம் மூலம் அறியலாம். இது பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது நட்சத்திரம் என்றால் மகேந்திர பொருத்தம் உள்ளது என அறிந்து கொள்ளலாம். இந்த மகேந்திர பொருத்தம் இருந்தால் தான் குழந்தை பாக்கியமும், குழந்தைகளால் செல்வமும், வளமும் உண்டாகும்.

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் இல்லை என்பதை எவ்வாறு கண்டறிவது?
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரும் எண்ணிக்கை 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆக இருந்தால் மகேந்திர பொருத்தம் இல்லை. மகேந்திர பொருத்தம் இல்லையெனில், ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தின் பலனைக்கொண்டு ஜோதிடர்கள் கணித்து கூறுவார்கள்.

ஜாதக ரீதியாக பொருத்தம்

மனிதர்களாக பிறந்த அனைவரும் ஆசைப்படுவது வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இதை வழங்கக்கூடிய தன்மை சுக்கிர பகவானுக்கு மட்டுமே உண்டு. சுக்கிரன் நமது ஜாதகத்தில் நல்ல யோகத்துடன் இருப்பது அவசியம். சுக்கிரன் லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால், நல்ல யோக பலன்களை வாரி வழங்குவார்.

அதே வேளையில், சுக்கிரன் ஜாதகத்தில் நீச்சம் பெற்றாலோ 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலோ, பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றுப் பலம் குறைந்து இருந்தாலோ எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். ஆண் பெண் இருவருக்கும் மகேந்திர பொருத்தம் இருந்தாலும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், மற்றும் குரு பகவான் நிலையை ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டும். லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும், ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்த்தல் வேண்டும்.

ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் குருவும் நன்றாக இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் 5ஆம் இடத்துக்கு அதிபதியானவர் பாவ கிரகத்துடன் தொடர்பில் இருக்கிறாரா என்பதை அனுபவம் வாய்ந்த ஜோதிடரின் உதவியுடன் ஆராய வேண்டும். இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனைகள் இருக்கும்.

மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கக் கூடியவன் சந்திர பகவான். நாம் எண்ணியதை செயல்படுத்தக் கூடியவன் சுக்கிர பகவான். எண்ணம் நல்லதாக இருந்தால் நடப்பது யாவும் நல்லதாகவே நடக்கும். தகுந்த பரிகாரம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version