பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள்
பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள் சிக்கனமாக குடும்பத்தை நடத்துவார்கள்.
பெண்ணின் இரண்டு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தால் ஆடம்பர வாழ்வு அமையும்.
பெண் நெற்றி மச்ச பலன்கள்
பெண்ணின் நெற்றியில் மச்சம் இருந்தால் அவர்களிடம் சாமர்த்தியம், மற்றும் பொறுமை மிகுந்திருக்கும்.
பெண்ணின் நெற்றிக்கு நடுவே மச்சம் இருந்தால் அவர்கள் பெரும் புகழ், பதவி, மற்றும் அந்தஸ்தை அடைவார்கள். மேலும் அவருக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவர் அமைவார்.
பெண்ணின் நெற்றியின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் தைரியம் மற்றும் பணிவான மன போக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அதிர்ஷ்டம் நிறைந்தவளாகவும், யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணமும் இருக்கும்.
பெண்ணின் நெற்றியின் இடது பக்கம் கருப்பு மச்சம் இருந்தால் அவர்கள் அற்ப குணம், முன்கோபம் உள்ளவராக இருப்பார்கள். அதுவே சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவராக இருப்பார்.
பெண் கண் மற்றும் உதடு மச்ச பலன்கள்
பெண்ணின் கண்களில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
பெண்ணின் வலது கண்ணில் மச்சம் இருந்தால் அவர் கர்வமில்லாமல் அடக்கமாக நடந்து கொள்வார்கள்.
பெண்ணின் இடது கண்ணில் மச்சம் இருந்தால் அவர் உழைப்பதற்கு தயங்க மாட்டார்கள். கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள்.
பெண்ணின் உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் இயற்கை விரும்பிகளாக இருப்பார்கள்.
பெண்ணின் மேல் உதட்டில் மச்சம் இருந்தால் அவர் அவசியச் செலவுகளை செய்வார்கள்.
பெண்ணின் கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவர் செல்வச் செழிப்புடன் இருப்பார்.
பெண்ணின் மேல் மற்றும் கீழ் என இரண்டு உதடுகளிலும் மச்சம் இருந்தால் அவரிடம் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த குணம் இருக்கும்.
பெண் வாய் மச்ச பலன்கள்
பெண்ணின் மோவாயில் மச்சம் இருந்தால் அவர் உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பார்கள். அவரிடம் பொறுமையுடன், அமைதியும் இயற்கையாகவே குடிகொண்டிருக்கும்.
பெண்ணின் மேல் வாய் பகுதியில் மச்சம் இருந்தால் அவருக்கு அமைதியான மற்றும் அன்பான கணவன் அமைவான்.
பெண்ணின் நாக்கில் மச்சம் இருந்தால் அவர்கள் பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
பெண்ணின் நாக்கின் அடிப்பாகத்தில் மச்சம் இருந்தால் அவர் தெய்வ பக்தி நிறைந்தவராக இருப்பார்.
பெண் மூக்கு மச்ச பலன்கள்
பெண்ணின் மூக்கின் மேல் மச்சம் இருந்தால் அவரிடம் செயல்திறன், மற்றும் பொறுமை நிறைந்திருக்கும். மேலும் அதிர்ஷடம் மற்றும் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும்.
பெண்ணின் மூக்கின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அவரிடம் மற்றவர்களை எடை போடும் குணம் குறைவாக காணப்படும்.
பெண்ணின் மூக்கின் இடது பக்கம் மச்சம் இருந்தால் அவருக்கு கூடா நட்பு, மற்றும் மற்ற பெண்களால் அவமானம் ஏற்படலாம்.
பெண்ணின் மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் வசதியான வாழ்க்கையில் திடீர் ஏற்றங்கள் இருக்கும். மேலும் அவருக்கு அமையும் கணவர் பெரிய பணக்காரராக இருப்பார்.
பெண்ணின் மூக்கின் மீது எங்கு மச்சம் இருந்தாலும் அவர் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவராக இருப்பார்.
பெண் கன்னம் மச்ச பலன்கள்
பெண்ணின் இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் உடல் வசீகரம் நிறைந்ததாக இருக்கும், மற்றும் விரும்பியதை அடையும் மனபோக்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்ணின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு வசதியான வாழ்க்கை அமையும். கஷ்டமும் சந்தோஷமும் சரிசமமாக அவர்கள் வாழ்வில் கலந்து இருக்கும்.
பெண்ணின் வலது தாடையில் மச்சம் இருந்தால் அவர் பிறரால் ஒதுக்கப்படுபவராக இருப்பார்.
பெண்ணின் இடது தாடையில் மச்சம் இருந்தால் அவர் அழகாக இருப்பார். மேலும் நற்குணங்கள் கொண்டவராக இருப்பார்.
பெண் காது மச்ச பலன்கள்
பெண்ணின் காதில் மச்சம் இருந்தால் அவர்களின் புகுந்த வீடு வசதி நிறைந்ததாக இருக்கும். மேலும் சமுகத்தில் இவர்களுக்கு என தனி மதிப்பு இருக்கும்.
பெண்ணின் காதின் பின் பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் கையில் பணம் தாராளமாக புழங்கும்.
பெண்ணின் வலது காதின் முனையில் மச்சம் இருந்தால் அவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்ணின் இடது காதின் முனையில் மச்சம் இருந்தால் அவர் அநாவசியமான செலவுகளைத் செய்பவர்களாய் இருப்பார்கள்.
ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.