Home ஆன்மிகம் மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள்

மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!” என்ற பாடலில் விளக்குகிறார்.

ஆண்டாள் நோன்புஆண்டாள் மட்டும் அல்ல, மாணிக்கவாசகரும் கூட திருவெம்பாவையில் மார்கழியின் அருமைகளை இவ்வாறு கூறுகிறார், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்” என்று மார்கழி மாத நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகிறார்.

சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். அந்த வகையில் ஜோதிடத்தின் அடிப்படையில் கால புருஷ தத்துவத்தின்படி மார்கழி 9 ஆவது மாதம் ஆகும். மார்க்கண்டேயர் மார்கழி மாதத்தில் பிறந்தவர். அதன்படி மார்க்கண்டேய புராணத்தின் படி மரணத்தை வெல்லக் கூடிய மாதமாகவே மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது. சிவ புராணத்தின் அடிப்படையில் ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய சிறந்த மாதம் மார்கழி. தேவ குருவான பிரகஸ்பதியின் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், இம்மாதம் தேவ லோகத்தில் காலைப் பொழுதாகும்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “மாதங்களில் நான் மார்கழி என்கிறார்”. அந்த வகையில், சாஸ்திரங்களின் அடிப்படையில் மார்கழி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் வாசுதேவன் என்றும், ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால், வாக்தேவி என்றும் பெயர் சூட்டுவது சிறப்பு.

கடவுளின் மாதம்

மார்கழி மாதம், இறைவனுக்கான மாதம். அதனால், தான் மார்கழி மாதத்தில் திருமணங்களில் செய்யப்படுவது இல்லை வாஸ்து பூஜைக்கும் கூட இடம் இல்லை.

மார்கழி மாதமும், கன்னிப் பெண்களும்

முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் நல்ல வாழ்க்கை துணையை வேண்டி பாவை நோன்பு இருப்பார்கள். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழி அமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மார்கழி மாத பாவை நோன்பு

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று குளித்து விட்டு மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அந்த திருவரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மார்கழி மாத கோலம்

தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. இது சூரியனின் தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் எழுந்து நீராடி இறைவனை வழிபடுகிறோம். கோலமிட்டு மகாலக்ஷ்மியை வீட்டிற்கு அழைக்கிறோம்.

அப்படியாக, இறைவனை வழிபடுவதால் நாடி, நரம்புகள் வலுவடையும். நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும். இந்த மாதத்தை சிலர் சூன்ய மாதம் என்றும் சொல்கின்றனர். திருமணம் போன்ற சுப காரியங்களை கூட இந்த மாதத்தில் செய்வதில்லை. இதற்கு காரணம், இறைவனை வழிபடுவதற்காகவே பெரியோர்கள் கொடுத்த மாதம் “மார்கழி மாதம்”. இந்த மாதத்தில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் மனம் மற்றும் உடலில் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும். இறைவனுக்காகவே ஒதுக்க வேண்டிய மார்கழி மாதத்தை திருமணம் போன்ற லௌகீக வாழ்க்கைக்கு தேவையான காரியங்களில் செலவிடுவது இறை பக்திக்கு ஏற்றது அல்ல என்பதற்காகவே மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்கின்றனர். இது முற்றிலும் இறைவனுக்கான மாதம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version