இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள் என கூற கேட்டிருப்போம். ஏன் அது போன்ற கனவுகள் வருகிறது, அதற்க்கு என்ன அர்த்தம் என தெரியாமல் குழம்பி போவார்கள்.
இது போன்ற கனவுகள் ஏன் வருகிறது, அதற்க்கு என்ன அர்த்தம் என்பதை பின்வருமாறு காண்போம்,
1. இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும், மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று அர்த்தம்.2. சவப்பெட்டி கனவில் வந்தால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
3. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் படுத்து தூங்குவதை போல கனவு வந்தால் உங்களுக்கு ஏற்பட போகும் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று அர்த்தம்.
4. இறந்தவர்களை நாம் தூக்கி செல்வது போல் கனவு கண்டால் நமக்கு நன்மைகள் வந்து சேரப்போகிறது என்று பொருள்.
5. இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு நல்ல பேரும், புகழும் அதன் மூலம் செல்வ செழிப்பும் ஏற்படும்.
6. இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு கண்டால் இக்கட்டான நிலையில் நீங்கள் இருக்கும்போது உங்களுக்கு உதவ சிலர் முன் வருவார்கள் என்று அர்த்தம்.
7. நாமே இறந்து விட்டது போல் கனவு கண்டால் நம்முடைய ஆயுள் கூடும்.
8. இறந்து போன தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று அர்த்தம்.
9. இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்குக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
10. நமக்கு வேண்டியவர்கள் யாராவது இறந்துவிட்டது போல கனவு கண்டால் துன்பங்கள் விலக போகிறது என்று பொருள்.
11. இறந்து போனவர்கள் (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் மிகுந்த நன்மை உண்டு.
12. இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று பொருள்.
13. இறந்தவர்கள் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
14. இறந்துபோன தாய் மற்றும் தந்தை சேர்ந்து கனவில் வந்தால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று அர்த்தம்.
15. தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று பொருள்.
16. உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், கனவு கண்டவரின் துன்பங்கள் விரைவில் நீங்கும் என்று பொருள்.
17. நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், வெகு விரைவில் நல்லசெய்தி ஒன்று வரும்.
18. குழந்தை இறந்தது போல கனவு வந்தால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.
19. இளம் மனைவி இறப்பது போல கனவு வந்தால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
20. இறந்த மனைவி, மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், அவரின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகி விடும்.
21. பேரன், பேத்தி எடுத்து தங்களது தலைமுறைகளுடன் நன்றாக வாழ்ந்து அனுபவித்த பெற்றோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நம்மை நேரில் வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத் தரும்.
22. விபத்து, மற்றும் தற்கொலை காரணமாக மரணம் அடைந்தவர்கள் கனவில் கண்டால் தீமைகள் ஏற்பட போவதாக அர்த்தம். மேலும் அவ்வாறான கனவுகள் வந்துபோன பின் கனவு கண்டவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.
எனவே, இது போன்ற கனவுகளை கண்டால் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு அர்ச்சனை செய்து விட்டு வருவது மிகவும் நல்லது.