Home ஜோதிடம் எண் கணிதம் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். அலங்கார பிரியர்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்கள்.

ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இவர்கள் பிறந்தவர்கள் எந்த கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். மற்றும் நேர்மையானவர்கள். இம்மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இவர்கள் சிறு விஷயங்களுக்குக்கூட உணர்ச்சி வசப்படும் குணம் கொண்டிருப்பார்கள். இவர்களில் ஒரு சிலர் கர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடத்தில் பெருந்தன்மையும், மன்னிக்கும் மனோபாவமும் நிறைந்திருக்கும்.

இவர்கள் பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள். இவர்கள் எந்த துறையை எடுத்துகொண்டாலும் அதில் தங்கள் தனித்திறமையை பதிப்பர். கலைத்துறை, எழுத்துத் துறை, ஆடை, ஆபரண, அலங்காரப் பொருள் விற்பனை நிலையம் போன்ற தொழில் துறைகளில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் இவர்கள் சிறு உடல் உபாதைகளைக் கூட நெருங்க விட மாட்டார்கள், அப்படி வந்தால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஐப்பசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள, கண்ணன் வெண்ணெய் உண்ணும் படம் வீட்டில் வைத்து வழிபடலாம். இவர்கள் கண்ணனை வழிபட்டால் செய்யும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அஷ்ட லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமானவர்களாக இருப்பீர்கள்.

இவர்கள் நீதியையும்,நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு பசுபோல் இருந்தாலும் கோபம் வரும் பொழுது கொந்தளித்துப் பின் விளைவுகளை சிந்திக்காமல் பேசி விடுவார்கள். இவர்களுக்கு நிரந்தரப் பகை என்பதுமில்லை. ஒருவரோடு சிநேகம் வைத்துக்கொண்டால் ‘ஓகோ’ என்று புகழ்ந்து சொல்வார்கள்.

கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் இவர்கள், பஞ்சாயத்துக்களில் தலைமைப் பொறுப்பேற்றால் பக்குவமாகப் பேசி நீதியை நிலைநாட்டுவார்கள். உணவு உட்கொள்வதில் அதிக விருப்பம் இவர்களுக்கு  உண்டு. குறிப்பாக விதவிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வித்தியாசமான சீதோஷ்ண நிலைகளில் வசிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் இளம் வயதிலேயே இவர்களுக்கு உருவாகும்.

கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறுநாட்களும் முடிந்தவரை விரதமிருந்து முத்தமிழால் முருகன் புகழ்பாடி செந்தூர் வழிபாட்டையும் மேற்கொண்டால் எந்தநாளும் இவர்களுக்கு இனிய நாளாக மாறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version