Home ஆரோக்கியம் உடல்நலம் உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது?

இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம். உடலில் உண்டாகும் அதிகப்படியான  உஷ்ணம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பருவ நிலை மாற்றத்தினால் கூட ஒரு சிலருக்கு உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புண்டு.

உடல் சூட்டை குறைக்க வழிகள் உடல் சூட்டினால் நம் உள்ளுறுப்புகளும் பாதிப்படையும். வயிறு, கண், சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ,வயிற்று வலி ,சளி தொல்லை ,உடலில் பாகங்களில் கட்டிகள்  போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த பிரச்சினைகளை தவிர்க்க நாம் உடலை சூட்டை தனித்து உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

உடல் சூடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த பல நல்ல விஷயங்களை நாகரீகம் மாற்றம் என்ற பெயரில் நாம் பின்பற்றாமல் மறந்து போனது தான் காரணம்.

நம் உடலை நாம் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது, தினசரி தலையில் எண்ணெய் வைப்பது, அதிகாலையில் எழுவது, இரவில் நேரத்தோடு உறங்குவது, உடல் சூட்டை அதிகப்படுத்தும் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள் கலந்த உணவை சாப்பிடுவது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது. போன்ற பல விஷயங்களை நாம் முறையாக செய்ய மறந்ததால் தான் உடல் சூடு ஏற்படுகிறது. இது தவிர சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட உடனே மாத்திரைகளை போட்டுக்கொள்வதாலும் உடல் வெப்பம் அடைகிறது.

உடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புகள்

  • உடல் சூட்டினால் கட்டிகள் தோன்றுதல்
  • தலைவலி
  • வயிற்று வலி
  • கண் எரிச்சல்
  • தலைமுடி உதிர்தல்
  • தோல் நோய் எற்ப்படுதல்
  • உடல் எடை குறைதல்
  • முகப்பரு எற்ப்படுதல்
  • சிறுநீரக பாதிப்பு

உடல் சூட்டினை குறைக்க சில வழிகள் 

  • புழுக்கமான இடத்தில் இருப்பதை தவிர்த்து இயற்கையான காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இருப்பது உடல் வெப்பம் குறைய உதவியாக இருக்கும்.
  • எலுமிச்சை பழ சாறினை அடிக்கடி குடிப்பது உடல் சூட்டை குறைப்பதற்கு பெரிதும் உதவும்.
  • உடல் சூடு இருப்பவர்கள் தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
  • காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து தினமும் கருப்பட்டியை சேர்த்துக் குடிப்பது மிகவும் நல்லது. கருப்பட்டி உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்உடல் சூடு என்றாலே உடல் சூடு அதிகமாகி அதனால் வயிறு வலி ஏற்பட்டால் உடனே கொஞ்சம் வெந்தயம் நீரில் சேர்த்து ஊற வைத்து குடிக்கலாம். வெந்தயம் உடலை குளிர்ச்சியடைய செய்யும்.
  • தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் உடலில் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.
  • குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளிக்காலம். அதிக அளவிலான சுடுதண்ணீரில் குளிப்பது உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும்.
  • உடல் சூடு உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் கீரைகளை சேர்த்து கொள்ள  வேண்டும். கீரை வகைகளில் முக்கியமாக பருப்பு கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக உடலில் இருக்கும் வெப்பத்தன்மை நீங்கும்.
  • உடல் சூட்டை குறைக்க எப்போதும் பருத்தி, கைத்தறி துணிகள் கதர் மற்றும் காட்டன் உடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம்.
  • உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இளநீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடானது குறைய தொடங்கும்.
  • உடல் சூட்டை குறைக்க பழங்கள் மற்றும் பழச்சாறினை அடிக்கடி எடுத்துகொள்வது நல்லது.
  • உடல் சூடு உள்ளவர்கள் தினமும் ஜீரகத் தண்ணீரை குடித்து வரலாம்.
  • உடல் அதிக வெப்பநிலை கொண்டவர்கள் வாரத்தில் 2 முறை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடல் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் இருக்கும்.
  • உடல் சூடு என்பது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் உள்ள பிரச்சனை ஆகும். அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் கூட உடல் சூடு பிரச்சனை வர காரணமாய் உள்ளது. வாரத்தில் ஒரு முறை இரவு உறங்குவதற்கு முன் தொப்பிளில் 2 துளிகள் விளக்கெண்ணெய் வைத்து உறங்குங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version