குளு குளு தர்பூசணி பாயாசம்
- தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது )
- நெய் – தேவையான அளவு
- முந்திரி, திராட்சை – தேவையான அளவு
- சர்க்கரை – 100 கிராம்
- பால் – 1 லிட்டர்
- ஜவ்வரிசி – 50 கிராம் ( ஊற வைத்தது )
- ஏலக்காய் தூள் – தேவையான அளவு
செய்முறை
- தர்பூசணி பாயாசம் செய்வதற்கு தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 50 கிராம் ஜவ்வரிசியை நன்கு கழுவி ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே நெய்யில் நறுக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு வாணலியில் 1 லிட்டர் பாலை சேர்த்து மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
- பால் காய்ந்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும்.
- ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வெந்ததும் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
- சர்க்கரை கரைந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் சேர்த்த பின் பால் சிறிதளவு கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து கலந்து விடவும்.
- கடைசியாக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கி சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறினால் சுவையான குளு குளு தர்பூசணி பாயாசம் ரெடி.