இறால் குழம்பு
தேவையான பொருட்கள்
- இறால் – ½ கிலோ
- உருளைக்கிழங்கு – 1 ( பெரியது )
- முருங்கைக்காய் – 1
- கொத்தமல்லி – சிறிதளவு
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
அரைக்க
- தேங்காய் துருவல் – ¼ கப்
- தக்காளி – 1
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 10 பல்
- பட்டை – 2
- சோம்பு – ½ ஸ்பூன்
தாளிக்க
- கடுகு – ½ ஸ்பூன்
- சீரகம் – ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
- இறாலை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.
- உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்கையை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல், தக்காளி, சோம்பு, பட்டை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முருங்கைக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து வதக்கவும் (இறாலை வதக்கி சேர்ப்பதால், குழம்பு சுவையாக இருக்கும்).
- வதக்கிய இறாலை குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.