Home அசைவம் மட்டன் செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல்

மட்டன் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள்

  1. மட்டன் கால் – ½ கிலோ  ( எலும்பில்லாதது )
  2. சோம்பு – ½ ஸ்பூன்
  3. பட்டை – 1 துண்டு
  4. கிராம்பு – 2
  5. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. மல்லி தூள் –  2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் – 1௦௦ கிராம் ( பொடியாக நறுக்கியது )
  11. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  13. உப்பு – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
  15. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. மட்டனை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு குக்கரில் நறுக்கிய மட்டன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
  4. இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  5. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. மட்டன் வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து பொரிய விடவும்.
  9. சோம்பு பொரிந்தவுடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  10. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  11. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
  12. வெங்காயம் நன்கு சிவக்க வதக்கிக் கொள்ளவும்.
  13. வெங்காயம் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும். மசாலா நன்கு வதங்கியதும் வேக வைத்த மட்டனை சேர்த்துக் கொள்ளவும்.
  14. மட்டனை சேர்த்த பின் நன்கு கிளறி ஒரு மூடி போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  15. 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து நன்கு கிளறவும்.
  16. கிளறிய பின் சிறிதளவு மிளகு தூள் , 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
  17. கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான காரசாரமான செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் தயார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version