இறால் 65
தேவையான பொருட்கள்
- இறால் – ½ கிலோ
- சோளமாவு – 1 ஸ்பூன்
- மைதா மாவு – 1 ஸ்பூன்
- முட்டை – 1
- தயிர் – 2 ஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- சீரக தூள் – ½ ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- தனியா தூள் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- இறால் 65 செய்வதற்கு கொஞ்சம் பெரிய இறாலாக பார்த்து வாங்கிக் கொள்ளவும்.
- முதலில் ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோளமாவு, மைதா, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, முட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
- இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து ½ மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- ½ மணி நேரம் ஊறிய பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஊற வைத்த இறாலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான இறால் 65 ரெடி.