சிக்கன் சால்னா செய்வது எப்படி
ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது
தேவையான பொருட்கள்
- கோழிக்கறி – ½ கிலோ
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பிரியாணி இலை – 1
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- சீரகம் – ¼ ஸ்பூன்
- சோம்பு – ¼ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- மல்லித்தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – 1 கைப்பிடி
அரைக்க
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- மிளகு – 2 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- மல்லி – 1/4 கப்
- காய்ந்த மிளகாய் – 2
- தேங்காய் துருவல் – ¼ கப்
செய்முறை
- இஞ்சி பூண்டு விழுது, மிளகு, சீரகம், மல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- பின்பு அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- இதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு நன்கு வதக்கவும்.
- பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- சிக்கனை சேர்த்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சால்னா ரெடி.