செட்டிநாடு கோழி ரசம்
தேவையான பொருட்கள்
- சிக்கன் – ½ கிலோ
- பட்டை – 1 துண்டு
- புளி – சிறிதளவு
- தனியாத் தூள் – ½ ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- மிளகுத்தூள் – ½ ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- இலவங்கம் – 2
- ஏலக்காய் – 2
- இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- கருவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
- சிக்கனை முதலில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்த வைத்துள்ள சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் அதில் ஏலக்காய், பட்டை, லவங்கம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் பச்சை மிளகாயை கீரி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- நன்கு வதங்கியதும் தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வெட்டி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- சிக்கன் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும்.
- சிக்கன் பாதி அளவிற்கு வெந்தவுடன் அதில் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளித்தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
- கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சுவையான செட்டிநாடு கோழி ரசம் தயார்.