Home சமையல் இனிப்புகள் அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம்

how to make aval payasam in tamil  தேவையான பொருட்கள்

  1. அவல் – 1 கப்
  2. வெல்லம் – ½ கப்
  3. பால் – 2 கப்
  4. ஏலக்காய் தூள்  – சிறிதளவு
  5. முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
  6. நெய் – தேவையான அளவு
  7. உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

  1. அவல் பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு  நெய் ஊற்றிக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அதே வாணலியில் சுத்தமான அவல் 1 கப் சேர்த்துக் கொள்ளவும்.
  4. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. வறுத்த அவலுடன் 2 கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்க்கவும்.
  6. மிதமான தீயில் வைத்து அவலை பாலில் வேக வைக்கவும்.
  7. மற்றொரு வாணலியில் ½ கப் வெல்லத்தை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  8. அவல் பாலுடன் சேர்ந்து நன்கு வெந்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை சேர்த்து கலந்து விடவும்.
  9. வெல்லம் சேர்த்து 1 நிமிடம் மட்டும் கொதித்தால் போதுமானது.
  10. பின்னர் அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிபருப்பை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அவல் பாயாசம் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version