Home சமையல் ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா

aarkadu makkan bedaதேவையான பொருட்கள்

  1. மைதா – 1 கப்
  2. இனிப்பு இல்லாத கோவா – 150 கிராம்
  3. வெண்ணெய்  – 1 ஸ்பூன்
  4. சமையல் சோடா – 1 சிட்டிகை
  5. எண்ணெய் – தேவையான அளவு

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

  1. பொடியாக நறுக்கிய முந்திரி , பாதாம் பருப்பு – 1 ஸ்பூன்
  2. சாரைப் பருப்பு – 1 ஸ்பூன்
  3. குங்குமப்பூ – சிறிதளவு

சர்க்கரை பாகு செய்ய

  1. சர்க்கரை – 1 1/2 கப்
  2. தண்ணீர் – 1 கப்

செய்முறை

  1. சமையல் சோடாவுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல் வரும் வரை தேய்க்கவும்.
  2. மைதாவை முதலில் நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. தேவைபட்டால் சிறிதளவு பால் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
  6. பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரபருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  8. 11/2 கப் சர்க்கரைக்கு 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  9. சர்க்கரை பாகு சிறு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை தயாரித்துக் கொள்ளவும்.
  10. பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  11. உருண்டையின் நடுவில் லேசாக தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிடவும்.
  12. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  13. பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து பரிமாறினால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version