Home அசைவம் சிக்கன் சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ்

பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கன் விலை மலிவானது மட்டுமல்ல ஆரோக்கியம் நிறைந்ததும் கூட.  வாருங்கள் சிக்கன் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழிகறி – ½ கிலோ
2. நூடுல்ஸ் – 500 கிராம்
3. கேரட் – 1
4. வெங்காயம் – 2
5. பீன்ஸ் – சிறிதளவு
6. முட்டைகோஸ் – சிறிதளவு
7. பச்சைமிளகாய் -2
8. முட்டை – 2
10. மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
11. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
12. மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
13. மஞ்சள்தூள் – ½ மேஜைக்கரண்டி
14. உப்பு – தேவையான அளவு
15. வெங்காயத் தாள் – சிறிதளவு
16. எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

செய்முறை

1. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கோழிக்கறி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். சிக்கன் வெந்ததும் எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும்.

2. பிறகு தோல், எலும்புகளை நீக்கி சதை பகுதியை மட்டும் பிரித்து வைத்து கொள்ளவும்.

3. சிக்கனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும்.

4. காய் வகைகளை மெல்லியதாக சீவி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி வைத்த சிக்கனை போட்டு நன்கு சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

6. நூடுல்ஸை சுடு தண்ணீரில் போட்டு 20 நிமிடம் வேக வைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

7. பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி வெங்காயத்தை பொட்டு வதக்கவும்.

8. வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதனுடன் காரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து நன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

9. அதனுடன் மசாலா பொடிகள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

10. இப்போது வேக வைத்த நூடுல்ஸ், பொரித்த சிக்கன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

11. சிறிது வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி கொள்ளவும்.

இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார். இதனுடன் தக்காளி மற்றும் மிளகாய் சாஸ் வைத்து சூடாகப் பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version