சருமத்தை வெண்மையாக மாற்றும் பால்
பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில் நிறைந்துள்ள கால்சியம் உடலுக்கு வலு சேர்ப்பதுடன் முகத்திற்கும் அழகு சேர்க்கிறது.
தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெரும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது.
ஆம் பாலை தினமும் முகத்தில் தடவி சிலமணி நேரம் மசாஜ் செய்தால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், மென்மையாகவும் இருக்கும்.
அதுமட்டும் இன்றி முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.
பால் எப்படி முகத்தை அழகாக மாற்றுகிறது
சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள தினமும் பாலை முகத்தில் தடவிவர வேண்டும்.
இதன் மூலம் முகத்தில் தோன்றும் இறந்த செல்களை வெளியேறி, புதிய செல்களை உருவாகி முகம் பளபளக்க செய்யும்.
முகத்தில் தோன்றும் சுருக்கங்களை அகற்றி முகத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்கிறது.
வாரத்தில் இரு முறையாவது உடல் முழுக்க பாலை தடவி அல்லது குளிக்கும் நீரில் பாலை கலந்து குளித்து வரலாம். இதன் மூலம் முகத்தில் தோன்றும் எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும்.லும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.
பாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸ்டன்ட்கள் இருக்கின்றன. ஆகவே முகத்தை அழகாக்குவதற்கு தேனைப் பயன்படுத்தினால், சருமத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, சருமத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்து வெளியேறி, சருமம் நன்கு பொலிவாக காணப்படும்.
பப்பாளியில் சருமத்துளைகளில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் நொதிப் பொருள் அதிகமாக உள்ளது. ஆகவே பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.
கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.