தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
இயற்கை நமக்கு அளித்துள்ள ஆரோக்கியமான பொருட்களில் மிகவும் அற்புதமானது தேன். தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.
தேனில் பல வகையான வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன. தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்திற்கு வலிமையை தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் பெரிதும் பயன்படுகிறது.
தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- தேன் சாப்பிடுவதால் உடலில் செரிமானம் விரைவாக நடைபெரும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.
- குழந்தைகள் தினம்தோறும் தேனை சாப்பிடுவதால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அதிக அளவு கிடைத்து உடல் வலிமை பெரும்.
- வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.
- தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
- நல்ல தூக்கம் வர தேன் அருமையான மருந்து ஆகும்.
- தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.இரவில் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் தேனை கலந்து குடித்து வந்தால் நல்ல உறக்கம் வரும்.
- தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் எனும் உட்பொருள் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுத்தமான மலைத் தேனை இரவு படுக்கும் முன் 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
- தேன் ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது.
- தேனை நாம் சாப்பிடுவதோடு மட்டுமல்லாம் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தினை கழுவினால் முகம் பளிச்சிடும்.
- உடலில் உண்டாகும் பல்வேறு ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- வறட்டு இருமல், தொண்டை அழற்சி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தேனுடன் சிறதளவு மிளகு தூளை சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர இருமல் சரியாகிவிடும்.