Home சைவம் துவையல் பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  • பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.
  • காய்ந்த மிளகாய் – 4
  • பெருங்காயத்தூள் – ¼  ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கடுகு – ¼ ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  • பெரிய நெல்லிக்காயை எடுத்து கழுவி அதன் கொட்டையை நீக்கி பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பின்னர் துண்டுகளாக நறுக்கிய நெல்லிக்காயை  மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை சூடுபடுத்தி அதில் தாளிக்க தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,காய்ந்த மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து இறக்கினால் சுவையான நெல்லிக்காய் துவையல் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version