Home ஜோதிடம் திருமணம், சடங்குகள் கணப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

கணப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

கணப் பொருத்தம் என்றால் என்ன?

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் வைத்தான் இறைவன். மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான குணங்கள் இருப்பதில்லை. அந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த கணப் பொருத்தம் உதவுவதால் இது மிகவும் முக்கியமான பொருத்தமாகும். கணப் பொருத்தத்தை இனப் பொருத்தம் என்றும் கூறுவார்கள். ஆண் மற்றும் பெண்ணின் குணாதிசயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த கனப்பொருத்தம் அவசியம்.

ஆண் மற்றும் பெண் இடையே சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ இந்த கணப் பொருத்தம் அவசியம். ஜாதகத்தில் இருவருக்கும் கண பொருத்தம் இருந்தால் இருவருக்கும் இடையே ஒற்றுமை இருக்கும். இதுவே கண பொருத்தம் இல்லை என்றால் இருவருக்கும் இடையே ஒற்றுமை என்பது இருக்காது. இருவரும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகளுக்கு சுபபலன் உண்டாகும்.

கணப்பொருத்தம் என்றால் என்ன

கணங்களின் வகைகள்

27 நட்சத்திரங்களையும் 3 வகை கணங்களாக பிரித்துள்ளார்கள். அவை தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று வகை கணங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் பிரிக்கபட்டு உள்ளன. தேவ கணம் கொண்டவர்கள் மனோபலம் உடையவர், ராட்சஸ கணம் கொண்டவர்கள் உடல் பலம் மிகுந்தவர்கள், மனுஷ கணம் கொண்டவர்கள் இருபலமும் உண்டு.

தேவ கணம் :

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் தேவ கணங்களாகும். இந்த கணங்கள் சாத்வீக குணம் கொண்டவை ஆகும்.

மனுஷ கணம் :

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் மனுஷ கணங்களாகும். இந்த கணங்கள் தமோ குணத்தை உடையவை.

ராட்சஸ கணம் :

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் ராட்சஸ கணங்களாகும். இந்த கணங்கள் ராட்சஸ குணத்தை உடையது.

கணப் பொருத்தம் பார்ப்பது எப்படி

1. இந்த நட்சத்திரங்களில் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக இருந்தால் அது மிகவும் பொருத்தமான கணமாகும்.
2. ஆண் தேவ கணமாக இருந்து, பெண் மனித கணமாக இருந்தால் அது உத்தமமான பொருத்தமாகும்.
3. பெண் தேவ கணமாக இருந்து, ஆண் மனித கணமாக இருந்தால் அது மத்திமமான பொருத்தம் ஆகும்.
4. பெண் மனித கணமாக இருந்து, ஆண் ராட்சஸ கணமாக இருந்தால் அது அதமம். அது பொருத்தமில்லை.
5. பெண் தேவ கணமாக இருந்து, ஆண் ராட்சஸ கணமாக இருந்தால் அது மத்திமமான பொருத்தமாகும்.

6. பெண் ராட்சஸ கணமாக இருந்து, ஆண் மனித கணமாகவும் இருந்தால் பெண்ணின் நட்சத்திரம், ஆண் நட்சத்திரத்திலிருந்து 14 அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரமாக இருந்தால் அந்தப் பெண் ராட்சஸ கணமாக இருந்தாலும் தோஷமில்லை. திருமணம் செய்யலாம்.

7. இது போல பெண்ணின் நட்சத்திர ராசி அதிபதியும், ஆணின் நட்சத்திர ராசி அதிபதியும் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றவர்களாக அவர்களது ஜாதகத்தில் அமைந்து இருப்பார்களானால் பெண் ராட்சஸ கணமாக இருந்தாலும் திருமணம் செய்யாலாம்.

கணப் பொருத்தம் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் :

பெண்ணின் நட்சத்திர ராசியும், ஆணின் நட்சத்திர ராசியும் ஒரே ராசியாக இருந்தால் அவர்களுடைய தனித்தனி நட்சத்திரத்தைக் கொண்டு, கணப்பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஆணும் பெண்ணும் ஒரே ராசி என்றால் அவர்களுக்கு ஜாதகரீதியாக ராசிப் பொருத்தம் இருக்கிறது என்றே அர்த்தம்.

எனவே, கணப் பொருத்தமும் இருக்கிறது என்று தீர்மானித்து விடலாம். பெண்ணின் இராசியும் ஆணின் ராசியும் ஒன்றுக் கொன்று சமசப்தம ராசிகளானால், அதாவது ஒன்றுக்கு மற்றொன்று ஏழாவது இராசியாக இருந்தால், கணப்பொருத்தமும் உண்டு.

ஆனால், கடகம் – மகரம், சிம்மம் – கும்பம் போன்றவை சமசப்தம் ராசிகள். இப்படிப் பெண், ஆண் இராசிகள் அமைந்தால், கணப் பொருத்தத்தை பார்க்க வேண்டும். மேஷம் – துலாம், ரிஷபம் – விருச்சிகம், மிதுனம் – தனுசு, கன்னி – மீனம் போன்ற ராசிகளைப் பொருத்தவரை ஒன்று பெண் ராசியாகவும் மற்றொன்று ஆண் ராசியாகவும் அமையும்போது, அதுவே ராசிப்பொருத்தம் ஆகிவிடுவதால், கணப் பொருத்தத்தைத் தனியாகப் பார்க்க அவசியமில்லை.

கணப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

கண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம். கண பொருத்தம் இல்லாமல் இருந்து, தினம் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம். அப்படி இந்த பொருத்தம் இல்லை என்றாலும் சுபமுகூர்த்த நேரமான, அதாவது அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகிவிடும் என்று கூறுவார்கள்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version