Home ஜோதிடம் திதி பலன்கள் எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ?

இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் ஏற்படும், நல்ல சிந்தனைகள் உருவாகும்.

திதியும் நெய்வேத்தியமும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு னால் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்தந்த தெய்வத்திற்க்கு உரிய நாளில், உரிய திதியில் வழிபடுவது அதிகப்படியான நற்பலன்களை நமக்கு அள்ளித் தரும். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம் உள்ளது.

பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை அதன் ஆங்கில தேதிகளை வைத்தே பலரும் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஜென்ம நட்சத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே, தங்கள் பிறந்த நாளை ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்றே கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், சிலர் பிறந்த திதியன்றும் தங்கள் பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. அவ்வாறு திதியன்று கொண்டாடுகையில், அந்த திதிக்குரிய நைவேத்தியத்தை தெய்வங்களுக்கு படைத்து வழிபாடு செய்தால் வாழ்வில் சிறப்பான பலனை அடையலாம்.                                 எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

திதியும் நெய்வேத்தியமும்

பிரதமை – நெய் படைத்து வழிபட வேண்டும்.

துவிதியை – சர்க்கரை படைத்து வழிபடலாம்.

திருதியை – நைவேத்தியமாக பால் படைக்கலாம்.

சதுர்த்தி – ஏதாவது ஒரு இனிப்பு செய்து வழிபடலாம்.

பஞ்சமி – வாழைப்பழம் வைத்து வழிபட வேண்டும்.

சஷ்டி – தேன் படைத்து வழிபட வேண்டும்.

சப்தமி – வெல்லம் படைத்து வழிபடலாம்.

அஷ்டமி – தேங்காய் நைவேத்தியம் செய்திட வேண்டும்.

நவமி – நெல் பொரி படைக்க வேண்டும்.

தசமி – கருப்பு எள் படைத்து வணங்க வேண்டும்.

ஏகாதசி – நைவேத்தியமாக தயிர் படைக்கலாம்.

துவாதசி – அவல் படைத்து வழிபடலாம்.

திரயோதசி – கொண்டைக்கடலை வைத்து வணங்க வேண்டும்.

சதுர்த்தசி – சத்து மாவு படைத்து வழிபடலாம்.

பௌர்ணமி மற்றும் அமாவாசை – பாயசம் படைத்து வழிபட வேண்டும்.

பிறந்த திதியன்று மேலே கூறப்பட்ட நைவேத்தியங்களை தெய்வங்களுக்கு படைத்து வணங்கிய பின்னர், ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் அந்தந்த நைவேத்தியங்களை தானமாக வழங்கினாலும் மிக நல்ல பலன் கிடைக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version