Home ஆரோக்கியம் உடல்நலம் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள்

குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்குகுழந்தையின் அறிவாற்றல் மற்றும் செயல்திறனில் மூளையின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகள் எப்பொழுதுமே சத்தான ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் குழந்தையின் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தான் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

எனவே அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியமாகும். அவர்களின் உணவில் வைட்டமின்க, தாதுக்கள், மினரல்கள் , கல்சியம், புரதம் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.

சிறு வயதில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்ட குழந்தைகளின் ஐக்யூ நன்றாக இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். ஒரு குழந்தையின் மூளையானது 5 வயது வரை 90 % வரை வளர்ச்சி அடைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை வழங்க வேண்டும்.

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  • பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்துள்ளது. வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
  • தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. தேனை அடிக்கடி சாப்பிடுவது புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுவதுடன் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
  • நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது.
  • தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
  • கடல் உணவுகளான மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.  இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது.
  • குழந்தைகளுக்கு காலை உணவாக ஓட்ஸ் உண்பது மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது. வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும்.  நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
  • பீன்ஸில் புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. சிறுநீரக பீன்ஸ் மற்றும் பிண்டோ பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை விட அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. எனவே இந்த பீன்ஸை குழந்தைகளுக்கு அவித்து சாப்பிட கொடுக்கலாம்.
  • பால் மற்றும் பாலில் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.
  • முட்டையில் இல்லாத ஊட்டச்சத்தே இல்லை என்று கூறலாம். இதில் கார்ப்ஸ், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. உங்க குழந்தை நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது. முட்டையில் உள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் கோலின் போன்றவை குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
  • காய்கறிகள் மற்றும் கீரைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது வளரும் குழந்தைகள் சாப்பிட வேண்டிய உணவுகளில் மிகவும் முக்கியமானது. இதில் உள்ள சத்துக்கள் குழந்தைகளுக்கு பலத்தை கொடுக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version