செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal)
இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது, மற்றும் எலும்பில்லாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இறாலை வைத்து செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது என பார்ப்போம்.
சில்லி இறால் செய்ய தேவையான பொருட்கள்,
- இறால் – ½ கிலோ
- மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
- தக்காளி – 1
- மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
- சோம்பு பொடி – ½ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை எடுத்து விட்டு சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள் , சோம்பு தூள் , தேவையான அளவு உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணை ஊற்றி ஊற வைத்துள்ள இறால் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
- மிதமான தீயில் வைத்து வதக்கவும், வதக்கும் பொழுது இறாலில் இருந்து தண்ணீர் விடும், அந்த தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
- இறால் ஓரளவிற்கு வவதங்கியதும் வெளியே எடுத்துவிடவும்.
- அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் வதக்கி வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
- இறாலை சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்கு வேக விடவும்.
- பின் கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு சில்லி இறால் தயார்.